திருமலை: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வசந்த உற்சவத்தின் 2வது நாளில் தங்க தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு 3 நாள் வசந்த உற்சவம் நேற்றுமுன்தினம் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக நேற்றுமுன்தினம் அங்குரார்ப்பணம் நடந்தது.
உற்சவத்தின் 2வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 8 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தங்க தேரில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் பத்மாவதி தாயார் கோயிலில் வசந்த உற்சவம் கோலாகலமாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் வசந்த உற்சவம் நேற்றுமுன்தினம் தொடங்கி, சிறப்பாக நடந்து வருகிறது என்றார்.
தொடர்ந்து, மதியம் 2 மணியளவில் சுப்ரவாரத்து தோட்டத்தில் பத்மாவதி தாயார் உற்சவ மூர்த்திகள் கொலு வைக்கப்பட்டு பால், தயிர், தேன், இளநீர் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6.30 மணியளவில் பத்மாவதி தாயார் நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், தேவஸ்தான இணை செயல் அலுவலர் பாஸ்கர், துணை செயல் அலுவலர் முனிரத்தினம் ரெட்டி, உதவி பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் ரெட்டி, உதவி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.