ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில், தை அமாவாசை திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி மதியம் 1 மணிக்கு கலையரங்கத்தில் சுவாமி உருகு பலகை தரிசனம் நடந்தது. கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால் உட்பட 21 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனையை நடத்தினார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து மாலையில் சுவாமி இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோல காட்சியும், இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம், தாமிரபரணி ஆற்றில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.
தமிகழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணி ஆறு மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து ஆற்றில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க வாகனங்கள் அனைத்தும் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. இரவில் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்குவதற்கு வசதியாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிகளில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ் தலைமையில் ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி, எஸ்ஐக்கள் சரவணன், சண்முகசுந்தரம், சுந்தரராஜன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் முக்கிய பகுதிகளில் இருந்து கோயிலுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்திருந்தார். இன்று (17ம் தேதி) காலை 5 மணிக்கு 2ம் கால வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு 3ம் கால பச்சை சாத்தி தரிசனம், மாலை சுவாமி ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சியும் நடக்கிறது. தை அமாவாசை நிறைவு விழா நாளை மறுநாள் நடக்கிறது. அன்று காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடலும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்குதலும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும், இரவு ஆலிலைச் சயனம், மங்கள தரிசனமும் நடக்கிறது.
சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு கள் அதிகமாகும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக் குறையைச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நல்லவை உண்டாகும் நாள்.