சேலம்: சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று, தேர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுக்கு முன் கோயில் தேர் பழுதானதால், தேர் திருவிழா நடத்தவில்லை. இதையடுத்து புதிய தேர் செய்ய, இந்து சமய அறநிலையத்துறை 45 லட்சம் நிதி ஒதுக்கிடு செய்தது. ஸ்தபதி பாலு தலைமையிலான குழுவினர் தேர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி நிறைவடைந்ததையடுத்து, நேற்று திருத்தேர் வெள்ளோட்டத்தை நடத்த அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது. இதற்காக சுகவனேஸ்வரர் கோயிலில், நேற்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாரதனையுடன் சிறப்பு வழிபாடு நடந்தது.
காலை 7 மணிக்கு, கோயில் வளாகத்தில் புதிய திருத்தேருக்கு மஹாரத கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சுகவனேஸ்வரர் சொர்ணாம்பிகை சுவாமி ஊர்வலத்துடன், திருவள்ளுவர்சிலை, கோட்டை மாரியம்மன் கோயில் வழியாக திருத்தேரை நிலையம் அமைந்துள்ள ராஜகணபதி கோயில் பகுதிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
திருத்தேர் நிலையம் சென்றடைந்ததும், சுவாமியை தேரில் வைத்து வெள்ளோட்டம் நடந்தது. எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், சக்திவேல் மற்றும் பக்தர் சூழ வடம் பிடித்து இழுத்தனர். 2வது அக்ரஹாரம், பட்டைகோயில், சின்னமாரியம்மன் கோயில், சின்னக்கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோயில் மீண்டும் நிலையத்தை தேர் வந்தடைந்தது. வெற்றிகரமாக வெள்ளோட்டம் நடந்து முடிந்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இவ்விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்கனவே ராஜகணபதி கோயில் அருகே இருந்த பழைய தேரை, சுகவனேஸ்வரர் கோயில் வளாகத்திற்கு கொண்டுச் சென்று, நிலை நிறுத்தினர்.
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.