அசுவினி
17-12-2018 முதல் 31-12-2019 வரை
ஏற்றத்தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் குணம் கொண்ட அசுவினி நட்சத்திர அன்பர்களே! இந்த புத்தாண்டில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். குருவின் சஞ்சாரத்தால் வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூர்யமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.
குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்கள் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூர்யமான பேச்சு வெற்றிக்கு உதவும். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன் போடும் முன் யோசிக்கவும். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.
நன்மை :
சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் தீர்வு.
எச்சரிக்கை:
வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.
பரிகாரம்:
தினமும் விநாயகர் அகவல் படித்து ஸ்ரீகணபதியை வணங்க எதிர்ப்புகள் விலகும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.