கார்த்திகை
17-12-2018 முதல் 31-12-2019 வரை
உங்களை விட உங்களைச் சுற்றி இருக்கும் மற்றவர்கள் பயன்படும் விதமாக திறமையைப் பயன்படுத்தும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே! இந்த புத்தாண்டில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். குருவின் சஞ்சாரத்தால் பணவரவு திருப்தி தரும். சின்னச் சின்ன பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்கள் எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர்கள் ஆலோசனை கை கொடுக்கும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாகப் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
நன்மை:
முடங்கிக் கிடந்த பணிகள் வேகம் பெறும்.
எச்சரிக்கை:
குடும்பத்தில் சிறு சலசலப்பு ஏற்படலாம்.
பரிகாரம்:
அருகிலிருக்கும் பெருமாளை வணங்கி வர காரிய அனுகூலம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.