1, 10, 19, 28
சூரியன் அம்சத்திலும் யோகத்திலும் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு சாதகமான ஆண்டாக அமையும். பல வகைகளில் நல்ல வசதி வாய்ப்புகள் தேடி வரும். பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. அக்கம் பக்கத்தினர், தோழிகளிடம் பெண்கள் அளவோடு பழகுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்குவது, கொடுப்பது கூடாது. தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். ஏப்ரல், மே, மாதத்தில் அதற்கு அச்சாரம் போடுவீர்கள்.
பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். திசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. கன்னிப் பெண்கள் சற்று நிதானமாக விட்டுக் கொடுத்து போவது நலம் தரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நிச்சயதாத்தம், வளைகாப்பு போன்ற விசேஷங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். அலுவலகத்தில் நிறை குறைகள் இருக்கும். வேலையில் கவனமாக இருப்பது அவசியம். பதவி உயர்வு பற்றி செய்திகள் வரும். வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். வியாபாரம் சாதகமாக இருக்கும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. செல்வாக்கு படைத்த உறவினர் உதவுவார். வேலையாட்களால் சில அதிருப்திகள் வந்து நீங்கும்.
பரிகாரம்:
செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து அன்னதானம் செய்யலாம். பிரதோஷ தினத்தில் நந்திக்கு அருகம்புல் மாலையும் சிவனுக்கு வில்வ மாலையும் சாற்றி வழிபடலாம். ஏழை பெண்கள் திருமணத்துக்கு உதவிகள் செய்யலாம்.