கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது ராகுதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகப்படி நீங்கள் பெண்ணைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உறவினர் வழியில் வெகுவிரைவில் பெண் அமையும். அவர் பிறந்த ஊரான கள்ளக்குறிச்சியில் இருந்து மேற்கு அல்லது வடமேற்கு திசையில் இருந்து பெண் அமையும். போகாத கோயில் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை என்று விரக்தியாக கடிதம் எழுதியுள்ளீர்கள். உங்களது முயற்சி எதுவும் வீணாகாது.
இறைவனின்பால் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் மகனின் திருமணத்தை ஏதேனும் ஒரு சிவாலயத்தில் வைத்து நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 16.4.2018க்குள் அவரது திருமணம் நடந்துவிடும். ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்து வாருங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் பூஜையறையில் பரமேஸ்வரனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். மனம் போல் மணம் கைகூடும்.
“ய:சிவோ நாமரூபாப்யாம் யாதேவீஸர்வ
மங்களா
தயோ: சம் ஸ்மரணாத் பும்ஸாம்
ஸர்வதோ ஜெயமங்களம்.”
பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரங்கள் மதிப்பார்கள். வீடு, வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.