மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. அவரது ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் சூரியன், புதன், கேதுவின் இணைவும், ஐந்தில் குரு சனியின் இணைவும் அவரது உடல்நிலையில் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது. எனினும் 28.12.2019க்குள் இந்தப் பிரச்னையை முற்றிலுமாக சரிசெய்துவிட இயலும். உஷ்ணமான உடலமைப்பினைக் கொண்டிருக்கும் உங்கள் மகளை தினமும் இரவு நேரத்தில் பசும்பாலுடன் சுத்தமான தேன் கலந்து அருந்தி வரச் சொல்லுங்கள்.
அதேபோல காலை எழுந்தவுடன் நீராகாரம் சிறிதளவு பருகி வருவதும் நல்லது. ஆங்கில மருந்துகளை குறைத்துக்கொண்டு சித்த மருத்துவ முறையை பின்பற்றி வாருங்கள். உங்கள் ஊரில் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் நரசிம்ம ஸ்வாமி சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். உடல்நிலை சீரடையும்.
“ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே
க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநாம் அபயப்ரதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.”
பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.