அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் குரு, சனி இருவரும் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ஜாதப்படி தற்போது சனி தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. தசாநாதன், புக்திநாதன் இருவரும் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் எப்போதும்போல் இல்லாமல் நீங்கள் சற்று மாற்றி யோசிக்க வேண்டிய தருணத்தில் உள்ளீர்கள். தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சனி ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் உங்கள் ஆயுட்காலம்வரை உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். தற்போதுள்ள சொத்தினை கடன் பிரச்னையால் விற்க நேர்ந்தாலும், எதிர்காலத்தில் நீங்கள் புதிதாக வேறொரு சொத்தினை வாங்க இயலும். 54வது வயதில் இருக்கும் நீங்கள் 71 வயது வரை உழைக்கக் கூடிய வலிமையைப் பெற்றுள்ளீர்கள். 08.07.2019 முதல் துவங்க உள்ள புதன் தசை உங்களுக்கு திருப்புமுனையை உண்டாக்கும். புதன் ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் ராகுவின் சாரம் பெற்றிருக்கிறார்.
ராகு தன ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும், தசாநாதன் புதனே இரண்டாம் வீட்டிற்கு அதிபதி என்பதாலும் சிறப்பான தனலாபத்தினைக் காண உள்ளீர்கள். உங்கள் தொழில்முறையில் எல்லோரையும் போல் இல்லாமல் வேறுவிதமாக சிந்தித்து புதுமையைப் புகுத்துங்கள், செயல்படுத்துங்கள். உங்கள் முயற்சி வெற்றி பெறும். உங்கள் மனைவியின் ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தில் சந்திரன்சுக்கிரனின் இணைவு சிறப்பான அம்சம் ஆகும். ஜன ஆகர்ஷணத்தையும், அதன்மூலமாக தன வரவினையும் பெற்றுத் தரும் திறன் கொண்டது உங்கள் மனைவியின் ஜாதகம். உங்கள் மனைவியையும் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு செயல்படுங்கள். உங்கள் இருவரின் இணைவு வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும். சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள சிவாலய வாசலில் அமர்ந்திருக்கும் அடியார்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானம் செய்து வாருங்கள். வறியவர்களின் பசி தீர உங்கள் கடன் பிரச்னையும் பறந்து போகும்.
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.