உங்கள் பெயரைப் போலவே கையெழுத்தும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவிற்கு அழகாய் இருக்கிறது. தலையெழுத்தை மாற்றி அமைக்கும் சக்தி உங்களிடம் தான் உள்ளது. புனர்பூச நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது கேது தசை துவங்கியுள்ளது. உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீடு சுத்தமாக இருந்தாலும் ஸ்தான அதிபதி செவ்வாயின் மூன்றாம் இடத்து அமர்வும், லக்னத்தில் இணைந்திருக்கும் நான்கு கிரஹங்களின் வலிமையும் கைத்தொழிலைக் குறிக்கின்றன. நீங்கள் சொந்தமாகச் செய்யும் தொழிலே உங்களுக்கு மன திருப்தியைத் தருவதோடு நிரந்தரமானதாகவும் அமையும்.
லக்னத்தில் இணையும் வலிமையான கிரகங்கள் உங்களை ஒரு சிறந்த நிர்வாகியாக மாற்றும். கேட்டரிங் தொழிலைக் கூட பயமின்றி செய்யலாம். நூறு பேரை வைத்து வேலை வாங்கும் திறன் உங்களிடம் உண்டு. அதே துறையைச் சார்ந்த குடும்பத்துப் பெண்ணாக மனைவி அமைவார். மனைவியின் துணையுடன் சொந்தமாக கேட்டரிங் தொழிலைச் செய்ய முற்படுங்கள். தயக்கத்தை விடுத்து தைரியமாக செயலில் இறங்குங்கள். சிறிய அளவிலான மெஸ் போன்ற தொழிலும் சிறப்பான முன்னேற்றத்த் தரும். திங்கள் தோறும் விநாயகப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று தும்பைப் பூ மாலை சாற்றி வழிபட்டு வர உங்கள் எதிர்காலத்திற்கான வழி பிறக்கும்.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.