உங்கள் மனைவியின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அளவற்ற அன்பினை கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஒருவருடைய ஜாதகம் மற்றொருவரின் ஆயுளைத் தீர்மானிக்காது என்பதை முதலில் மனதில் நிலைநிறுத்துங்கள். உங்கள் ஜோதிடர் சொன்னது முற்றுலும் உண்மை என்றே வைத்துக்கொள்வோம். அதாவது உங்களுக்கு களத்ரதோஷம் உள்ளது, மனைவி இறந்துவிடுவாள் என்று விதி இருந்தால் அது நடந்துதானே தீரும், அதற்காக திருமணமே செய்யாமல் இருக்க முடியுமா? திருமணமே செய்துகொள்ளாமல் இருந்தால் ஜாதகத்தில் உள்ள விதி என்னவாகும்? திருமணம் என்ற ஒன்று நடந்தால்தானே மனைவி வருவாள், மனைவியே இல்லாதவனுக்கு களத்ரதோஷம் என்ற ஒன்று எப்படி வரும்? கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் உங்கள் மனைவி இறந்த நேரத்தில் ராகு தசையில் சனி புக்தி நடந்திருக்கிறது. மேலும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய செவ்வாய் மூன்றில் அமர்ந்து தோஷத்தைத் தந்திருக்கிறார். இந்தக் காரணங்களைக் கொண்டு உங்கள் ஜாதக தோஷத்தினால்தான் அவர் இறந்துவிட்டார் என்று சொல்ல முடியாது. உங்கள் மனைவியின் ஜாதகம் பலவீனமானதாக இருந்திருக்க வேண்டும். அவரது ஆயுள்பாவத்தின் பலவீனத்தால் மரணம் என்பது சம்பவித்திருக்கும். நடந்ததைப் பற்றி எண்ணி கவலைப்படுவதை விட்டுவிட்டு உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நடந்துகொள்ளுங்கள். மறுமணத்தில் ஆர்வம் இல்லாத நீங்கள் பசுமடத்தில் ஓய்வுநேரத்தை செலவிடப்போவதாக எழுதியுள்ளீர்கள். அவ்வாறே தொடர்ந்து செய்து வாருங்கள். பசுமடத்தில் செய்யும் சேவையானது முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் செய்யும் சேவையாகும். இதனைவிட வேறு பெரிய பரிகாரம் ஏதும் அவசியமில்லை. உங்கள் மகனை நல்லவிதமாக வளர்ப்பதோடு அவனை வாழ்வில் உயர்ந்த நிலைக்கும் கொண்டு வருவீர்கள். இறைவனின் செயல் ஒவ்வொன்றிலும் ஏதேனும் காரணம் இருக்கும். இதனைப் போக போக அனுபவத்தில் உணர்வீர்கள். கவலை வேண்டாம்.
வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வந்து செல்லும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.