விசாகம்
19.12.2017 முதல் 28.03.2020 வரை
கொடுத்த வேலையை சரியான முறையில் முடிக்கும் திறன் படைத்த விசாக நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பீர்கள். பெண்களுக்கு, கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருடன் உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.
+ : அனைவரிடத்திலும் உறவு சுமுகமாக இருக்கும்.
- : சோம்பல் அதிகரிக்கும்.
பரிகாரம்:
அருகிலுள்ள சிவன் ஆலயத்திற்குச் சென்று தினமும் நவகிரக சந்நதியில் உள்ள சனிபகவானை தரிசித்து வாருங்கள். தடைகள் அனைத்தும் நீங்கும்.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 5.