மிருகசீரிடம்
19.12.2017 முதல் 28.03.2020 வரை
எந்த வேலையையும், வேகமான நடவடிக்கைகளால் சரியான நேரத்தில் செய்யும் மிருகசீர்ஷ நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் சுபகாரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி, தெளிவு உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கைத் தரம் உயரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நன்கு முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்கக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.
குடும்பத்தாரால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் குறையும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
+ : உத்தியோகம், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
- : எடுத்துக் கொண்ட காரியங்களில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க திட்டமிடுதல் அவசியம்.
பரிகாரம்:
கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்கிவர, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 6, 9.