ஆயில்யம்
19.12.2017 முதல் 28.03.2020 வரை
கொண்ட நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் ஆறாமிட சனியின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்தபடி காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். ஆனாலும் பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். பெரியோர் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய பதவிகள், கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக நிலவிவந்த குடும்பம் சார்ந்த பிரச்னைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
+ : பணவரத்து நன்றாக இருக்கும்.
- : குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படலாம்.
பரிகாரம்:
விநாயகப் பெருமானை அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க, காரியத் தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 5, 6.