புதுக்கோட்டை: 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த பல்லவன்குளம் பாண்டுரெங்கன் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை நகர் பல்லவன்குளம் வடக்கு கரையில் (விட்டோபா பெருமாள்) ரகுமாயி தாயார் சமேத பாண்டுரெங்கன் கோயில் உள்ளது. இது சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பழமைவாய்ந்த இக்கோயிலுக்கு ஆன்மிகவாதிகள், ஊர் பொதுமக்கள், அறநிலையத்துறை மற்றும் விழாக்குழுவினரின் முயற்சியால் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து கடந்த 4ம் தேதி விஷ்வக்கேச பூஜை, புண்யாஹவாசனம் பூஜைகளுடன் தொடங்கி முதல் கால ஹோமங்கள், 2, 3, 4, மற்றும் 5ம் கால ஹோமங்கன் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று 6ம் கால ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், ராணி ரமாதேவி தொண்டைமான், ராஜா ராஜகோபால தொண்டைமான், சாருபாலா தொண்டைமான், டாக்டர் ராமதாஸ், செயல் அலுவலர் பாண்டியராஜூ, ஆலய மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. அதேபோல் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தெற்கு வாடி வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று காலை புனிதநீர் கொண்டுவரப்பட்டு கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்காள் கலந்து கொண்டனர்.
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.