நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு, அவசரப்பட்டு செய்த பல செயல்களால் இன்று பல சிரமங்களையும் அனுபவி த்து வருகிறீர்கள். பெண்கள் குடும்பத்தின் பேச்சை கேட்டு நடந்தால்தான் பாதுகாப்பாக வாழ முடியும்.
தங்கள் விருப்பம்போல செயல்பட்டால் இது போன்ற விரும்பத்தகாதவற்றை சந்திக்கத்தான் வேண்டி இருக்கும். ஆனாலும் கவலை வேண்டாம். சில கிரக சேர்க்கை காரணமாக உங்களுக்கு திருமண வாழ்வில் பல சோதனைகள் ஏற்பட்டுள்ளன.
தற்கால நிலவரப்படி உடனடியாக எந்த மாற்றமும் சாத்தியமில்லை. சுக்கிரனில் குரு, குருவில் சுக்கிரன் சில மாற்றங்களை ஏற்படுத்தும். எதிர்காலம் படிப்படியான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப்பொருள்சேரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைகற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக் கும். அமோகமான நாள்.