பர்கிட் மாநகரம். நீங்கள் பிறந்த தேதி, நேரத்தினைக் கொண்டு உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் நீங்கள் ஒரு நல்ல சிந்தனையாளர் என்பது தெளிவாகிறது. அஸ்வினி நட்சத்திரம், மேஷராசி, மீனலக்னத்தில் பிறந்துள்ளீர்கள். ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டு வருமானம் ஈட்டுவதற்கு புதன் மற்றும் குருபகவானின் அருள் துணை புரிய வேண்டும். மேலும், வாக்கு ஸ்தானம் வலிமையுடன் இருக்க வேண்டும். தங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி குரு பகவான் ஐந்தாம் வீட்டில் உச்சபலம் பெற்றிருப்பதும், ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரன் வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் நல்ல நிலையே ஆகும்.
தற்போது உங்கள் ஜாதகப்படி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுவின்தசை நடப்பதால் உங்களால் சம்பாதிக்க இயலும். ஜோதிடவியலில் மேற்படிப்பினைத் தொடருங்கள். உடன் ஜோதிடம் பார்ப்பதையும் தொழிலாகக் கொள்ளுங்கள். அன்பான வார்த்தைகள் உங்களுக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தரும். தனிமையில் அமர்ந்திருந்தால் தேவையற்ற சிந்தனைகள் உங்கள் உடல்நிலையையும், மனநிலையையும் பாதிக்கும். முடிந்தவரை தனிமையைத் தவிர்த்து விடுங்கள். ஜோதிடவியலில் மேற்படிப்பிலும், ஜோதிடம் சார்ந்த உங்கள் கருத்துகளை கட்டுரைகளாக எழுதி வைப்பதிலும் கவனம் செலுத்துங்கள்.
புதன் உங்கள் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் உங்களுடைய எழுதும் திறமை சிறப்பாக உள்ளது. உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். 82 வயது வரை ஆயுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்திற்குச் சென்று தாமிர சபையில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமானை தரிசனம் செய்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். புதன்தோறும் அருகிலுள்ள சிவாலயத்தில் நடராஜரை தரிசனம் செய்யுங்கள். ஆடல்வல்லானின் திருவருளால் பெயரும் புகழும் அடைவீர்கள்.
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.