உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சனி தசை நடந்து வருகிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசியில் பிறந்துள்ள அவர் தற்போது ஏழரைநாட்டுச் சனி காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். கும்ப லக்னத்தில் பிறந்துள்ள அவருடைய ஜாதகத்தின்படி ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய், ஒன்பதில் கேதுவின் இணைவினைப் பெற்றுள்ளதால் சுயதொழில் செய்யும் அம்சம் அவருக்கு துணைபுரியவில்லை. தன, லாப ஸ்தான அதிபதி குரு ஆறில் அமர்ந்திருப்பதும் சுயதொழிலில் லாபத்தினைத் தராது. அவருடைய ஜாதகப்படி அவர் சொந்தமாக தொழில் தொடங்குவதைவிட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணி செய்வதுதான் நல்லது.
இரும்பு சம்பந்தப்பட்ட துறையிலேயே அவர் பணி ஆற்ற இயலும். கௌரவம் பார்க்காமல் ஏற்கெனவே பணியாற்றிய நிறுவனத்திலேயே முயற்சிக்கச் சொல்லுங்கள். இவருடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் நிச்சயமாகக் கிடைக்கும். தை அமாவாசை நாளில் பிறந்துள்ள இவரது ஜாதகத்தின்படி ஏற்றத்தாழ்வுகள் அவ்வப்போது உண்டாவது சகஜமே. ஒருநேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்; மற்றொரு நேரத்தில் ஏதுமின்றி வெறுமனே அமர்ந்திருக்க நேரிடும். இந்த மாறுபாடான நிலை அவ்வப்போது உருவாகிக்கொண்டுதான் இருக்கும்.
இதனைப் புரிந்துகொண்டு நல்ல நேரத்தில் சேமிக்கவும், நேரம் சரியாக இல்லாதபோது இருக்கும் சேமிப்பினைக் கொண்டு வாழ்க்கையை நடத்தவும் பழகிக்கொள்வது நல்லது. அமாவாசையில் பிறந்த உங்கள் கணவரை மாதந்தோறும் அமாவாசை நாளில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு இயன்ற அன்னதானத்தினைச் செய்துவரச் சொல்லுங்கள். முதியவர்களின் ஆசிர்வாதம் அவரை நன்றாக வாழவைக்கும்.
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.