கடந்த 12 வருட காலமாக சித்ரவதையான வாழ்க்கையை அனுபவித்து வருவதாக எழுதியுள்ளீர்கள். சதயம் நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தையும், விசாகம் நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் உங்கள் ஜாதகமே பலம் பொருந்தியதாக உள்ளது. அமாவாசை நாளில் பிறந்திருக்கும் உங்கள் கணவர் தாழ்வு மனப்பான்மையின் காரணமாக அவ்வாறு நடந்து கொள்கிறார். அவரது குணத்தினை தற்போது மாற்ற இயலாது. வயது முதிர்வும், வாழ்க்கையில் காணும் அனுபவமும்தான் அவரை மாற்ற வேண்டும். அதுவரை நீங்கள் பொறுத்திருக்க இயலாது. குட்ட குட்ட குனிந்து கொண்டிருந்தால் எப்படி வாழ்வினில் முன்னேற முடியும்? பயமின்றி நிமிர்ந்து நில்லுங்கள்.
எத்தனை நாட்களுக்குத்தான் பெற்றோரின் துணையை எதிர்பார்க்க இயலும். உங்கள் மகனின் நல்வாழ்விற்காகவாவது நீங்கள் உயிர் வாழ வேண்டாமா? சிம்ம ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகன் வளர்ந்து தன் தந்தையைக் கண்டிக்கட்டும். உங்கள் இருவரின் ஜாதகப் பலத்தின்படி உங்கள் கணவருக்குத்தான் உங்கள் தயவு தேவையே தவிர, உங்களுக்கு அவருடைய தயவு தேவையில்லை. ஜீவன ஸ்தானத்தில் இணைந்திருக்கும் குருவும், சுக்கிரனும் உங்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவார்கள். தற்போது நடந்து வரும் தசாபுக்தியும் நீங்கள் வேலை செய்து சம்பாதிக்க துணைபுரிகிறது. பிரதி சனிக்கிழமை தோறும் வீட்டிலேயே ஆஞ்சநேயர் படத்தை வைத்து பூஜை செய்து வாருங்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். வாழ்வு உங்கள் வசப்படும்.
துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.