கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது 06.11.2018 வரை சுக்கிரதசையில் சனிபுக்தி நடக்கிறது. அதற்குள்ளாக உங்கள் பிரச்னைக்கு ஒருவழி பிறந்து விடும். கணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் லக்னாதிபதி குருவுடன் சனியும் இணைந்து அமர்ந்திருப்பதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆழ்மனதில் அவரை மிகவும் விரும்பும் உங்களால் அவர் செய்திருக்கும் துரோகத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
அமாவாசை நாளில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகபலத்தின்படி இது உங்களுடைய விதிப்பயனே என்பது தெரிகிறது. நீங்கள் அவரை அருகில் சேர்த்துக் கொள்ளவும் வேண்டாம், மொத்தமாக விலகிவிடவும் வேண்டாம். அவர் இருக்கும் இடத்தில் இருந்து கொள்ளட்டும். உங்கள் குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வினில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். அவர்களுக்கு தந்தையாக அவர் செய்ய வேண்டிய கடமையை மட்டும் செய்யட்டும். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயர் ஆலயத்தில் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். மனம் தெளிவடையக் காண்பீர்கள்.
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.