தாமதமான திருமணம் குழந்தை பாக்கியத்தை தாமதமாக்கி வருகிறது. திருமணத்தின்போது உங்கள் இருவருக்கும் முறையே 33 மற்றும் 35 வயது நடந்திருக்கிறது. இன்னும் ஐந்து வயது தற்போது கூடியிருக்கிறது. உத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகுதசையில் சந்திரபுக்தி நடந்து வருகிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் குருபுக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி குரு புத்ர ஸ்தானமாகிய ஐந்தில் உச்சம் பெற்றிருப்பதால் தற்போது சாதகமான நேரமே நடந்து கொண்டிருக்கிறது.
உங்களுடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் இரண்டாம் வீட்டில் சந்திரன், குரு, ராகு ஆகிய கிரஹங்களுடன் இணைந்துள்ளார். செவ்வாய்தோஷம் என்பது இல்லையென்றாலும், இந்தவொரு அமைப்பு பிள்ளைப்பேற்றினைத் தாமதமாக்கி வருகிறது என்றாலும் வருகின்ற 01.03.2019 முதல் நல்லநேரம் துவங்குவதால் அந்த நேரத்தில் குழந்தைச் செல்வம் கிடைத்துவிடும். செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு தம்பதியராகச் சென்று வழிபட்டு வாருங்கள். தினமும் கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி குமரக்கடவுளை வழிபட்டு வருவதால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கக் காண்பீர்கள். குமரனின் அருளால் குலம் விருத்தி அடையும்.
“ஜநித்ரீபிதாச ஸ்வபுத்ர அபராதம் ஸஹேதே ந கிம் தேவஸேநாதிநாத அஹம்சாதிபாலோ பவான் லோகதாத: க்ஷமஸ்வ அபராதம் ஸமஸ்தம்மஹேச.”
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.