மகரம்
சனி பகவானை ராசியாதி பதியாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே, இந்த வருடம் எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். வாகன யோகத்தை தரும் மாதம். பெரியோர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியைத் தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலுக்குத் தேவையான உப கரணங்கள் வாங்க முயற்சி எடுங்கள் அது பலிதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளால் டென்ஷன் அடைவார்கள்.
எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதை சிறிது நாட்கள் தள்ளிப் போடுவது நல்லது. பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். நீண்ட நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அதேசமயம் புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த வருடம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்னைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியைத் தரும்.
திருவோணம்:
இந்த வருடம் யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்துக் கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலனளிக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.
அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த வருடம் தொழில், வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளுடனும், குடும்பத்தில் இருப்பவர்களுடனும் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்தி தரும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
பரிகாரம்:
விநாயகருக்கு சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வெள்ளி.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
சனி சுக்கிரன் புதன்.
எண்கள்:
6, 7, 9.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்.
செல்ல வேண்டிய தலம்:
நவகிரகங்கள் இருக்கும் கோயில்களுக்குச் சென்று நவகிரகங்களை 9 முறை சுற்றி வரவேண்டும்.
மலர் பரிகாரம்:
மல்லிகைப் பூவை சிவனுக்கு சமர்ப்பித்து வணங்கி வருவது நல்லது.