1, 10, 19, 28
8.12.2019 முதல் 14.12.2019 வரை
அனைவருடனுடம் சரிசமமாக நடந்து கொள்ளும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம். பெண்களுக்கு நண்பர்களிடம், உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு மனக்கவலை நீங்கும். அரசியல்துறையினர் புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் மேன்மை உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு கல்கண்டு நிவேதனம் செய்து வழிபட்டு வாருங்கள்.