5, 14, 23
8.12.2019 முதல் 14.12.2019 வரை
பல சூழ்நிலைகளில் உங்கள் தயாள குணத்தை வெளிப்படுத்தி விடும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த வாரம் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை ஆலோசனை கேட்டு சில காரியங்கள் செய்து நல்ல பலன் அடைவார்கள். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசங்கள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினர் வெளிநாடு வாய்ப்புகள் பெறுவார்கள். அரசியல்துறையினருக்கு திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
பரிகாரம்: புதன் பகவானுக்கு மலர் கொடுத்து வணங்கி வர நல்லது நடக்கும்.