01-01-2025 முதல் 31-12-2025 வரை
(உத்திரம் 2 3 4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)
எந்த சூழ்நிலையையும் சாதுரியமாக கையாளும் கன்னி ராசி அன்பர்களே,இந்த வருடம் எதிலும் அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது. 14-4-2025 வரை குரு பகவான் 9ல் சஞ்சரிப்பதால் தெய்வ அனுகூலம் உண்டாகும், அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும், தந்தை வழியில் ஆதாயமான பலன்கள் உண்டு. 14-4-2025 க்கு பிறகு குரு பகவான் 10ல் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் பணிகளில் சிரத்தை உடன் இருங்கள். 29-3-2025 வரை சனிபகவான் 6ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். போட்டிகளில் வெற்றி உண்டு. 29-3-2025 க்கு பிறகு சனிபகவான் 7 ல் கண்டக சனியாக சஞ்சரிப்பதால், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளி ஆட்களின் தலையீட்டை தவிர்க்கவும். எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். 18- 5-2025 வரை ராகு கேது பகவான் முறையே 7-1ல் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம், வெறுப்பு, விரக்தி மனப்பான்மை, எதிர்மறை சிந்தனை, மன அழுத்தம் உண்டாகும்.18-5-2025 க்கு பிறகு ராகு கேது பகவான் முறையே 6-12ல் இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதையும் வெல்லும் ஆற்றல் உண்டாகும். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள்.வியாபாரிகள் புதிய வியாபாரம் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை முழுமையாக நம்ப வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
பரிகாரம்: சோளிங்கரில் உள்ள நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை சனிக்கிழமையில் சென்று வழிபட தொழில் பிரச்னைகள் நீங்கும்.