(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)குடும்பம்: குரு, சுக்கிரன், சூரியன், ராகு ஆகிய கிரகங்கள் சுப பலம் பெற்று சஞ்சரிக்கும் நிலையில், சுப கிருது புத்தாண்டு ஆரம்பமாகிறது! இந்த கிரகங்களினால், நன்மைகள் கிட்டும். மற்ற கிரகங்களிடமிருந்து அதிக நன்மைகளை எதிர்பார்ப்பதில் பயனில்லை. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். தேவையான அளவிற்கு வருமானம் தந்து உதவுவார், குரு பகவான்! ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். திருமண முயற்சிகள் அனைத்தும் கைகூடும். குரு, சுக்கிரன் ஆகிய இருவரும் சிறந்த சுப பலம் பெற்றிருப்பதால், பலருக்கு சொந்த வீடு அமையும் பேறு உள்ளது. குடும்பத்தில், சுப நிகழ்ச்சிகளும், சுபச் செலவுகளும் ஏற்படும். சமாளிப்பதில் எவ்விதப் பிரச்னையும் இராது. உத்தியோகம் காரணமாக, வெளிநாட்டில் அகப்பட்டுக்கொண்ட நெருங்கிய உறவினர் ஒருவரின் வருகை மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குரு – சுக்கிரனின் நிலையினால், புதிய வஸ்திரம், ஆபரண சேர்க்கைக்கு சாத்தியக்கூறு உள்ளது. உத்தியோகம்: விரயஸ்தானத்தில், ஜீவன காரகரான சனி சஞ்சரிப்பதால், அலுவலகத்தில் கடின உழைப்பும், கூடுதல் பொறுப்புகளும் மனதில் வெறுப்பை ஏற்படுத்தும். பொறுமையுடன் இருப்பது, எதிர்கால நலனுக்கு மிகவும் உகந்தது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும்; மேலதிகாரிகளின் கெடுபிடியும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தும். உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். ஏனெனில், தற்போது கிரகநிலைகள் சாதகமாக இல்லை! பொறுமை, நிதானம் அவசியம்.தொழில், வியாபாரம்: திடீரென்று சந்தை நிலவரம் மாறுவதால், விற்பனை பாதிக்கப்படும். லாபம் குறையும். சகக் கூட்டாளிகளினால், பிரச்னைகள் ஏற்படும். புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். நிதிநிறுவனங்களினால் ஏற்படும் பிரச்னைகள் நெருக்கடியை ஏற்படுத்தும். உற்பத்திக்கு அத்தியாவசியமான அடிப்படைப் பொருட்களின் விலை விஷம்போல் ஏறும்! லாபத்தைத் தக்க வைத்துக்கொள்ள அரும்பாடுபட வேண்டியிருக்கும். அபிவிருத்தித் திட்டங்களை ஒத்திப்போட்டுவிடுங்கள்!! ஏனெனில், கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை.கலைத்துறையினர்: நம்பிக்கை துளிர்த்து வரும் நிலையில், மீண்டும் ஓர் பின்னடைவை நீங்கள் சந்திக்கநேரிடுகிறது என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன! ரஷ்யா – உக்ரைன் போரினால், உலகச் சூழ்நிலையில் வேகமாக ஏற்பட்டுவரும் பாதிப்பு, கலைத்துறையையும் பாதிக்கும் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. திரைப்படத் தயாரிப்பாளர்கள் அளவோடு முதலீடு செய்து புதிய படங்களை எடுக்கலாம். பெரிய அளவில் முதலீடு செய்து முயற்சிப்பது ஆபத்தானது என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.அரசியல்துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் பெற்ற சுக்கிரன், நல்ல சுப-பலம் பெற்று சஞ்சரிப்பதால், கும்ப ராசி அரசியல் துறையினருக்கு, சுப கிருது புத்தாண்டு, ஓர் அரிய வரப் பிரசாதமாக அமையவுள்ளது. பலருக்கு, கட்சி மாற்றமும் அதன் காரணமாக, பதவி ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை சுக்கிரனின் சஞ்சார நிலை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. நீதிமன்ற வழக்குகள் இருப்பின், தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.மாணவ – மாணவியர்: வித்யா காரகரான புதன், சாதகமாக இல்லை. இந்த ஆண்டு முழுவதும்! இருப்பினும், குரு பகவான் சிறந்த சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், புதனின் தோஷம் குறைகிறது. அவ்வப்போது மனதில் சிறு குழப்பங்களும், படிப்பில் சோர்வும் ஏற்படக்கூடும். கல்வி முன்னேற்றத்தை இவை அதிகமாக பாதிக்காது. இருப்பினும், பரிகாரம் நல்ல பலனளிக்கும்.விவசாயத் துறையினர்: வயல் பணிகளில் கடுமையாக உழைக்க வேண்டிவரும். இருப்பினும், உழைப்பிற்கேற்ற விளைச்சலும் வருமானமும் கிடைப்பது மன நிறைவைத் தரும். கால்நடைகள் நல்ல அபிவிருத்தியடைய இருப்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறுவதற்கு வழிபிறக்கும். அரசாங்கச் சலுகைகள் தேடி வரும். நவீன விவசாய வசதிகள் அரசாங்கத்தின் மூலம் சலுகை விலையில் கிடைக்கும்.பெண்மணிகள்: குடும்ப நிர்வாகத்தை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, சுப கிருது புத்தாண்டு ஓர் அரிய பரிசு எனக் கூறினால், மிகையாகாது! ஆண்டு முழுவதும் வருமானம் போதிய அளவு இருப்பதால், குடும்ப நிர்வாகத்தில், பிரச்னை எதுவும் ஏற்படாது. குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் பற்றிய பிரச்னை ஒன்று கவலையை அளிக்கும். வேலைக்குச் சென்று வரும் பெண் மணிகளுக்கு, அலுவலகச் சூழ்நிலை கவலையளிக்கும். மேலதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். தானுண்டு; தன் கடமை உண்டு என்றிருப்பது, பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.அறிவுரை: பிரதான கிரகங்கள் ஓரளவே அனுகூல நிலைகளில் சஞ்சரிப்பதால், இப்புத்தாண்டில் நீங்கள் சில எதிர்பாராத பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அவை உங்கள் நலனை அதிகமாக பாதிப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகையால், அத்தகைய தருணங்களில், பொறுமையுடன் வளைந்து கொடுத்து, நிதானமாக இருப்பது நல்லது.பரிகாரம்: 1. திருநள்ளாறு திருத்தல தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். 2. சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருத்தல் கவசமென உங்களைப் பாதுகாக்கும். பால், பழம் மட்டும் சாப்பிடலாம். வியாழக்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயிலிலோ அல்லது மகான்களின் ஜீவ சமாதிகளிலோ மாலையில் ஐந்து நெய் தீபங்கள் ஏற்றிவருவது கைமேல் பலனளிக்கும். எளிய பரிகாரமாகத் தோன்றினாலும், இதன் சக்தி அளவிடற்கரியது!!2. புண்ணிய நதி ஒன்றில் புனித நீராடுவது, குருபகவானுக்கு மிகவும் பிடித்த பரிகாரமாகும்.3. லிகித ஜெபமெனக் கொண்டாடப்படும் 1008 தடவைகள் “ஸ்ரீ ராமஜெயம்” என புத்தகத்தில் எழுதிவருவது….
310