01-01-2025 முதல் 31-12-2025 வரை
(அவிட்டம் 3 4 ம் பாதம், சதயம், பூரட்டாதி 1 2 3 ம் பாதம்)
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை உணர்ந்து செயல்படும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வருடம் உற்சாகமான வருடமாக அமையும்.14-4-2025 வரை குரு பகவான் 4ல் சஞ்சரிப்பதால் தாய் உடல்நிலை பாதிப்பு, சொத்து தொடர்பான பிரச்னை, உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். 14-4-2025 க்கு பிறகு குழந்தைகளால் மகிழ்ச்சி,பொருளாதாரம் முன்னேற்றம், அதிர்ஷ்ட வாய்ப்புகள், பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டாகும்.29-3-2025 வரை சனி பகவான் ஏழரைச் சனியில் ஜென்ம சனியாக இருப்பதால் மன அழுத்தம், எதிர்மறை சிந்தனை, சுயமாக சிந்திக்க முடியாமை போன்றவை வந்து நீங்கும். 29-3-2025க்கு பிறகு சனி பகவான் ஜென்ம சனி விலகி 2ல் வாக்குச் சனியாக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த மன அழுத்தம் குறையும், தெளிவு பிறக்கும், பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வந்து நீங்கும்.18-5-2025 வரை ராகு கேது பகவான் முறையே 2-8 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பம், வாக்கு விரோதம், வந்து நீங்கும். 18- 5- 2025 க்கு பிறகு ராகு கேது பகவான் முறையே 1-7ல் சஞ்சரிப்பதால் மன குழப்பம், முடிவெடுக்க முடியாத சூழல், பொருளாதார பிரச்னை, கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் குருவின் பார்வை ராகுவுக்கு இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பை தராது. அனைத்தும் சுமூகமாக முடியும்.வியாபாரிகளுக்கு புதிய வியாபாரம் முயற்சிகள் கைகூடும். இருப்பினும் எதிலும் அகல கால் வைக்க வேண்டாம்.உத்யோகத்தில் உயர்வு உண்டாகும். உயர் அதிகாரிகள் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் காணப்படும்.வெற்றி வாய்ப்பு உண்டாகும்.கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளால் பிரபலம் அடைவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: திருவண்ணாமலை அண்ணாமலையாரை சனிக்கிழமையில் சென்று வழிபட தொழில் போட்டிகள் விலகும்.