15-5-25 முதல் 14-6-25 வரை
எதையும் அடக்கி ஆளும் திறன் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சூரிய பகவான் ராசிக்கு 10ல் சஞ்சரிப்பதால் எடுத்த காரியத்தை திறம்பட முடித்து வெற்றி கிடைக்கும். ஆளுமை திறன் அதிகரிக்கும். புதன் 9ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எடுக்கும் முயற்சியில் மிக பெரிய வெற்றி பெறும். தங்க நகை ஆபரண சேர்க்கை உண்டு. செவ்வாய் நீச்சம் பெறுவதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. வீடு வாகன சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். சனி 7ல் இருப்பதால் எதிரிகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.தம்பதிக்குள் வெளி ஆட்களின் தலையீட்டை தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்வில் சிறிது தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். தந்தை உடல்நிலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் திறமை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தடைபட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்து சேரும். செல்வாக்கு அந்தஸ்து உயரும்.
சந்திராஷ்டம நாட்கள்: மே 22, 23, 24.
பரிகாரம்: சூரியனார்கோவில் சூரிய பகவானை ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடுவதால் தடைகள் பிரச்னைகள் குறைந்து வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.