01-01-2025 முதல் 31-12-2025 வரை
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
ஆழ்ந்த அறிவுத்திறன் உடைய விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு பொன்னான ஆண்டாக அமையும். 14-4-2025 வரை குரு பகவான் 7 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் மேன்மை உண்டாகும். 14-4-2025 க்கு பிறகு குரு பகவான் 8 ல் அஷ்டம குருவாக சஞ்சரிப்பதால் எதிலும் கவனம் தேவை, யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம், வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.29-3-2025 வரை சனி பகவான் 4ல் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிப்பதால், தாய் உடல் நிலையில் பாதிப்பு, உறவுகளால் மனக்கசப்பு, வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் வந்து நீங்கும். 29-3-2025க்கு பிறகு அர்த்தாஷ்டம சனி விலகுவதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும், வாழ்வில் நல்ல மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். 18- 5- 2025 வரை ராகு கேது பகவான் முறையே 5-11ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டம், பண வரவு, எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். 18-5-2025 க்கு பிறகு 4-10 ல் ராகு கேது சஞ்சரிப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை, உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். தொழில் உத்யோகத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சில நேரங்களில் மனதுக்கு பிடிக்காத பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுவீர்கள். புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்து வழிநடத்திச் செல்ல வேண்டும்.மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான சிறு தடங்கல்கள் ஏற்படலாம். நிதி உதவி எதிர்பார்த்தப்படி கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் குரு பகவானை வியாழக்கிழமையில் சென்று வழிபட சுபகாரியங்கள் நடக்கும்.