கன்னி

எதிலும்  தீர்க்கமாக சிந்தித்து செயல்படும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வருடம் சின்ன சின்ன தடைகள் பிரச்னைகள் இருந்தாலும், எதையும் தாண்டி வெற்றி கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு ஏற்படும். தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். 21-4- 2023  வரை கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். 21-4- 2023  க்கு பிறகு எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். இல்லையெனில் வீண் பிரச்னைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். 17-1-2023 வரை குழந்தைகள் உடல்நலனில் கவனம் தேவை. குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னைகள் வந்து நீங்கும். மனதில் ஏதோ ஒரு குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். திடமாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. 17-1-2023 க்கு பிறகு முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் விலகிச் செல்வார்கள். சமூகத்தில் அந்தஸ்து செல்வாக்கு அனைத்தும் உயரும். பொருளாதார நிலையில் மேம்பாடு அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். பிரபலமாக கூடிய சூழல் உருவாகும். 30-10-2023 வரை சின்ன சின்ன தடைகள் பிரச்சனைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகன பயணங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பேச்சிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வந்து நீங்கும்.30-10-2023க்கு பிறகு தேவையற்ற மனக் குழப்பமும் கவலையும் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை . வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்காலம் பற்றிய பயத்தை தவிர்த்து தைரியத்துடன் செயல்பட்டால் அனைத்தும் நலமாக அமையும். பெண்களின் கனவுகள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டுதுறையில் உள்ள மாணவர்கள் முன்னேற்றம் காண்பர்.பரிகாரம்: சிங்கிரி கோயில் ஸ்ரீநரசிம்மர் மற்றும் லட்சுமி தாயாரை  புதன் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்….

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us