மேஷம்

Published: Last Updated on

அஸ்வினி,பரணி,கார்த்திகை 1ம் பாதம்

எதிலும் முதன்மையாக விளங்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வருடம் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எல்லா வகையிலும் நல்ல அனுகூலமான பலன்கள் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் நண்பர்களின் ஆதரவு உண்டு. புதிய சொத்து சேர்க்கை உண்டு.குரு பகவான் 2 ல் இருப்பதால் இனிய பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப உயரும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.ராகு கேது முறையே 12, 6 ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள் வந்து நீங்கும். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும்.உத்யோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு வந்து சேரும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவர். பெற்றோர் ஆசிரியர் உதவிகரமாக இருப்பார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து பாராட்டை பெறுவீர்கள்.அரசியல்வாதிகள் தலைமையின் நம்பிக்கையை பெறுவார்கள். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினா் தற்போதுள்ள வாய்ப்புகளால் பிரபலம் அடைவர். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.

பரிகாரம்: பழனி முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us