search-icon-img
featured-img

மேஷம்

Published :

(01.01.2026 முதல் 31.12.2026 வரை )

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

குடும்பம்: புத்தாண்டு பிறக்கும்போது, தன்னம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும்கூட அதிகமாகத்தான் உள்ளது! மேஷ ராசி அன்பர்களுக்கு, இப்புத்தாண்டில் வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணத் தட்டுப்பாடு இருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.திட்டமிட்டுச் செலவு செய்தால், இப்புத்தாண்டில் கவலையின்றி இருக்கலாம் எனச் சுட்டிக் காட்டுகின்றன, கிரக நிலைகள்.குடும்பத்தில், மன நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். குரு பகவான், திரூதீய ஸ்தானத்தில் நிலை கொண்டுள்ளதால், சற்று தாராளமாகவே செலவு செய்வீர்கள்!!திருமண முயற்சிகளில், சிறிது தடங்கல்கள் ஏற்பட்டு, பின்பு வரன் அமையும். வேலையில்லாமல் கவலைப்படுபவர்களுக்கு, நல்ல செய்தி காத்துள்ளது!ஒரு சிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாகவே உள்ளது. நீதிமன்ற வழக்குகளில் சாதகமான போக்கு தென்படும்.கிரக நிலைகளின்படி, இப்புத்தாண்டு உங்களுக்கு நல்லாண்டாகவே அமைந்திருப்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.குடும்பத்தில் சச்சரவு ஏதுமின்றி ஒற்றுமையும், பரஸ்பர அந்நியோன்யமும் நிலவும். வெளியூர்ப் பயணங்களினால், லாபமும் நல்ல பலனும் கிட்டும்.

உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சனி பகவான், ராகுவுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் அன்றாடப் பணிகளில் உற்சாகத்தையளிக்கும்.தற்போது நடைபெறும் தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், சிறு பதவியுயர்வு அல்லது ஊதிய உயர்வையும் எதிர்பார்க்கலாம்.வெளிநாடு சென்று பணியாற்ற விருப்பமுள்ள மேஷராசி அன்பர்கள், இப்போது முயற்சித்தால் வெற்றி கிட்டும்.புதிதாக வேலைக்கு முயற்சித்துவரும் இளைஞர்களுக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும்.தற்காலிகப் பணிகளில் உள்ள அன்பர்களுக்கு, பணி நிரந்தரமாகும்,

தொழில், வியாபாரம்: உற்பத்தியை அதிகரிப்பதற்கும், புதிய விற்பனைக் கிளைகளை ஆரம்பிப்பதற்கும் அனுகூலமான காலகட்டமிது.நிதி நிறுவனங்களின் உதவியும், ஆதரவும் கிடைக்கும். சகக் கூட்டாளிகள், உங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, ஒத்துழைப்பார்கள். சந்தை நிலவரமும் உங்களுக்கு ஆதரவாகவே உள்ளது.

கலைத் துறையினர்: கலைத்துறை, பெரும்பாலும் சுக்கிரனின் ஆதிக்கத்தில்தான் உள்ளது என புராதன ஜோதிடக் கிரந்தங்கள் விவரித்துள்ளன. அத்தகைய சுக்கிரன், இம்மாதம் முழுவதும் சுப பலம் பெற்று வலம் வருவதால், நல்ல வருமானமும், வாய்ப்புகளும் கிட்டும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், வெளிநாடு சென்றுவரும் வாய்ப்புகளும் உருவாகும்.உங்கள் பொருளாதார நிலையில் நல்ல முன்னற்றம் ஏற்படும். குறிப்பாக, இளம் கலைஞர்களுக்கு, உற்சாகத்தையளிக்கும் மாதமிது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

அரசியல் துறையினர்: அரசியல் துறையினருக்கு, அதிர்ஷ்டம் தேடிவருகிறது, இம்மாதத்தில்! பொது மக்களிடையே ஆதரவு பெருகும். செல்வந்தரும், செல்வாக்கு மிகுந்தவருமான பிரமுகர் ஒருவரின் ஒருவரின் நட்பு கிடைக்கும் என கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும், உங்களுக்குச் சாதகமாக வலம் வருவதால், கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் மேலிடும். உயர் கல்விக்கு பண உதவி கிடைக்கும். இது ஓர் அரிய வாய்ப்பாகும். நழுவ விட்டுவிடாதீர்கள்!

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையுடன் தொடர்புள்ள செவ்வாய் மற்றும் இதர கிரகங்களும் சுப பலம் பெற்று வலம் வருவதால், நல்ல விளைச்சல் கிடைக்கும். சந்தை நிலவரம் உங்களுக்கு ஆதரவாக உள்ளது. உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு புதிய தொடர்புகள் ஏற்பட்டு, உற்சாகத்தையளிக்கும். வருமானம் உயரும். நவீன விவசாய வசதிகள் எளிதில் கிட்டும். வங்கிகளின் ஒத்துழைப்பு கைகொடுக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற முடியும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாக்கும் சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றனர்! குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, நிம்மதியான காலகட்டமாகும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் வனிதையருக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்கு உற்சாகத்தையளிக்கும் வேலை கிடைக்கும். திருமணமாகாத கன்னியருக்கு, நல்ல வரன் அமையும்.

அறிவுரை: கைப் பணத்தைச் சற்று நிதானமாகச் செலவு செய்யவும். பணத்தை எண்ணி, எண்ணிச் செலவு செய்தால், ஏகாந்தமாய் இருக்கலாம்!2. சக்திக்கு மீறிய உடல் உழைப்பையும், அநாவசியமான அலைச்சலையும் தவிர்த்தால், மருத்துவரை அணுகவேண்டிய அவசியமிருக்காது. மருந்து - மாத்திரைகளுக்குண்டான செலவுகள் உங்களுக்கு மிச்சம்தானே?3. மாணவ - மாணவியர் உடன் பயிலும் மாணாக்கர்களுடன் அளவிற்கு அதிகமாக நெருங்கிப் பழகாமலிருப்பது, உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாலிருக்க இது உதவுமல்லவா?

பரிகாரம்: சித்த மகா புருஷர்களின் ஜீவ சமாதி, மகான்களின் பிருந்தாவனங்களுக்குச் சென்று, அங்கு மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வைத்தால் கைமேல் பலன் கிட்டும்.