search-icon-img
featured-img

தனுசு

Published :

(01.01.2026 முதல் 31.12.2026 வரை )

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

குடும்பம்: சனி, ராகு, மற்றும் குரு ஆகியோர் அனுகூல நிலைகளில் சஞ்சரிக்கின்றனர். ஜென்ம ராசியில் சூரியனும், செவ்வாயும் சேர்ந்திருப்பதால், உஷ்ண சம்பந்தமான உடற் பிணிகள் வருத்தும். வருமானத்தை மீறிய செலவுகள், பணப் பிரச்னையை ஏற்படுத்தும். சிறு விஷயங்களுக்குக்கூட, அதிகமாக உழைக்க நேரிடும். நெருங்கிய உறவினர்களிடையே வாக்குவாதமும், கருத்து வேற்றுமையும், ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். குழந்தைகளின் படிப்பில், பின்னடைவு ஏற்படும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். மருத்துவச் செலவுகள் தவிர்க்க இயலாதவை. குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய கற்பனையான கவலைகள் மனத்தை அரிக்கும். என்றோ பட்ட பழைய கடன்கள் நீடிப்பதால், அமைதி குறையும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் பெண் அல்லது பிள்ளையின் வருகை, குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றம் ஏற்படும். சொந்த வீடு அமைவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து அனுகூலமாக சஞ்சரிப்பதால், வேலை பார்க்கும் இடத்தில், நிம்மதியாக பணியாற்ற முடியும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும், பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், சிறு ஊதிய உயர்வு அல்லது பதவியுயர்வு கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். வெளிநாடு செல்வதற்கு, ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம்.

தொழில், வியாபாரம்: கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளன! அளவோடு உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு அளவில், உற்பத்தியை அதிகரிக்கலாம். புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கு கிரக நிலைகள் உதவிகரமாக உள்ளன. சகக் கூட்டாளிகள் உதவிகரமாக செயல்படுவார்கள்.

ஏற்றுமதித் துறையினருக்கு, லாபகரமான காலகட்டமாகும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் உள்ளது.

கலைத் துறையினர்: சுக்கிரன் இக்காலகட்டத்தில், சுப பலம் பெற்று வலம் வருவதால், கலைத் துறை அன்பர்களுக்கு, நல்ல வருமானம் கிடைக்கும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. புதிய வாய்ப்புகள் வருமானத்தை உயர்த்தும்.

சினிமாத் துறையினர், படப்பிடிப்பிற்காக மாநிலங்களுக்குச் சென்றுவர வேண்டியிருக்கும். தற்கால தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வெளிநாடு ஒன்றிற்குச் சென்றுவரும் சாத்தியக்கூறும் உள்ளது.கர்நாடக சங்கீத வித்வான்கள், வீணை, நாதசுவரம், வயலின் கலைஞர்கள் ஆகியோருக்கு மிகவும் அனுகூலமான காலகட்டமிது! பல கலை நிகழ்ச்சிகள் உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். ஒருசிலருக்கு, வெளிநாடுகளுக்குச் சென்று, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் தேடி வரும். சிலருக்கு, விருது கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் படைத்த சுக்கிரன், அவருடைய பூரண சுப பலத்துடன், விளங்குவதால், கட்சியில் மரியாதையும், உங்கள் மீது நம்பிக்கையும் அதிகரிக்கும்.

மாணவ - மாணவியர்: கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர். அதன் பலனை நீங்கள் முழுமையாக இம்மாதம் அனுபவிக்க முடியும். தேர்வுகளில், சிறந்து விளங்குவீர்கள். விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் ஆகியவற்றிலும் வெற்றிபெற கிரக நிலைகள் பக்கபலமாக உள்ளன.வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், முயற்சிக்கலாம். கிரக நிலைகள் சுப பலம் பெற்று விளங்குவதால், பிரசித்திப் ெபற்ற சர்வ கலாசாலையில் எளிதில் இடமும், அனுமதியும் கிட்டும். இது ஓர் அரிய சந்தர்ப்பம். இழந்துவிடாதீர்கள். கிரகங்கள் அனைத்தும் சதா சர்வ காலமும் சுழன்று கொண்டேதான் இருக்கிறார்கள். ஆதலால், சந்தர்ப்பங்கள் கிடைப்பது மிகவும் அரிது. கிடைக்கும்போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்!

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு விளங்குகிறது, “பூமி காரகர்” என ஜோதிடக் கலை பாராட்டும் செவ்வாய், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், வெளிநாடு சென்றுவர நல்ல வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு, உதவித் தொகையும் கிடைக்கக்கூடும். முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும். வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது!சிலருக்கு, புதிய விளை நிலமும், கால்நடைகளும், நவீன விவசாய உபகரணப் பொருட்களும் வாங்க வசதி ஏற்படும். வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களின் உதவி கிடைக்கும்.

ெபண்மணிகள்: சுக்கிரனின் முழு ஆதரவும் உங்களுக்கு உள்ளதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும், திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, மனம்போல் மாங்கல்யம் அமையும். வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று உயர் கல்வி பயில விருப்பமிருப்பின், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கலாம். வெற்றி கிட்டும்.

அறிவுரை: கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழியுங்கள்! வீண் செலவுகளைத் தவிர்ப்பதும் அவசியம்.

பரிகாரம்: வைதீசுவரன் கோயில் தரிசனம், செவ்வாயின் தீவிரத்தைக் குறைக்கும். உடலில் அதிக உஷ்ணத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கு, ஏற்ற பரிகாரமிது!.