search-icon-img
featured-img

விருச்சிகம்

Published :

(01.01.2026 முதல் 31.12.2026 வரை )

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்: அர்த்தாஷ்டக ராசியில், சனி - ராகு கூட்டுச் சேர்க்கையாக சஞ்சரிக்கும் இத்தருணத்தில், 8-ம் இடமாகிய மிதுனத்தில், குரு பகவானும் சஞ்சரிப்பதால், பல குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும்.வருமானத்திற்கு மீறிய செலவுகளில் பணம் விரயமாகும். மருத்துவச் செலவுகளும், அதிகமாகவே இருக்கும். சிறு விஷயங்களுக்காக குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதமும் ஒற்றுமைக் குறைவும் ஏற்படும்.திருமண முயற்சிகளில், ஏமாற்றமே மிஞ்சும். கணவர் - மனைவியரிடையே ஒற்றுமை பாதிக்கப்படும். தசா, புக்திகள் சாதகமாக இல்லாவிடில், நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரிடும்.ஒருசிலருக்கு, வீடு மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

உத்தியோகம்: அர்த்தாஷ்டக ராசியில், உத்தியோகத் துறைக்குக் காரகத்துவம் கொண்ட சனி பகவானுடன், ராகுவும் இணைந்திருப்பதால், வேலை பார்க்கும் இடத்தில், பல பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையும். மேலதிகாரிகள், உங்கள் பணிகளில் ஏதாவதொரு குற்றங்குறை கூறிக் கொண்டேயிருப்பார்கள். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும், விருச்சிக ராசி அன்பர்களுக்கு, தாய் நாடு திரும்ப வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கும்.

தொழில், வியாபாரம்: மிகக் கடுமையான போட்டிகளை நீங்கள் சமாளிக்க வேண்டி வரும். லாபம் சுமாராக இருக்கும். புதிய முதலீடுகளில் இம்மாதத்தில் ஈடுபடாமலிருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் மேலும் தாமதமாகும். அதனால், கடினமான நிதி நிலைமையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்.நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஒத்துழைப்பும், குறையும். கூட்டாளிகளுடனான ஒற்றுமை பாதிக்கப்படும். சந்தை நிலவரம் அடிக்கடி மாறிக்கொண்டேயிருப்பது, உங்கள் வியாபார முன்னேற்றத்தைப் பாதிக்கும். விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப்போடுதல் நல்லது. வெளிநாட்டுப் பயணங்களும், இப்போது கூடாது என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.

கலைத் துறையினர்: கலைத் துறை அன்பர்களுக்குச் சற்று சோதனையான காலகட்டம் இது! “நிச்சயமாக நமக்குத்தான் கிடைக்கும்....!” என எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைநழுவிப் போகும்!!உங்்கள் வாழ்க்கை வசதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். கையிலிருப்பதை எண்ணி எண்ணி செலவு ெசய்யாவிடில், கடுமையான நிதி நெருக்கடியை நீங்கள் சமாளிக்க வேண்டி வரும். புதிய திரைப்படங்கள் எடுப்பதைத் தவிர்த்தல் அவசியம். ஏனெனில், கிரக நிலைகள் சாதகமாக இல்லை! மிகப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படக்கூடும். திரைப்படம் எடுப்பதும், ஒருவகையில் சூதாட்டம் போன்றதே!!சில தருணங்களில் லாபம் கிடைக்கும். இல்லாவிடில், நஷ்டம் எனும் பெரும் பள்ளத்தில் தள்ளிவிடும். சிந்தித்து முடிவெடுப்பது அவசியம் என்பதை கிரக நிலைகள் சந்தேகத்திற்கிடமின்றி எடுத்துக்காட்டுகின்றன.

அரசியல் துறையினர்: மிகவும் அவசியம் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.இன்றைய அரசியல் உயர்த்தும் அல்லது கீழே தள்ளிவிடும். இந்த உண்மையை நீங்கள் உணர்ந்தும், ஏற்றும் முடிவெடுப்பது உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தனது அதிகாரத்தில் கொண்டு விளங்கும் கிரகம் புதனாவார்! ஆதலால்தான் அவரை, “வித்யாகாரகர்” எனப் போற்றிக் கொண்டாடுகிறது, ஜோதிடக் கலை! அவர் இம்மாதத்தில், ஓரளவே சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், படிப்பில் சிறிது கவனம் குறையும்.படிக்க உட்கார்ந்தாலே உறக்கமும், சோம்பலும் மேலிடும். ஊன்றிப் படிக்காத காரணத்தினால், படித்தவையும் உடனுக்குடன் மறந்து போகும். தினமும் சிறிது நேரம் உங்கள் தாய் - தந்தையரையும், குல தெய்வத்தையும் பூஜித்து வந்தால், சிறந்த பலன் கிடைக்கும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைத் தனது ஆதிக்கத்தில் கொண்டுள்ளது, செவ்வாய் கிரகமாகும்! சூரியனுக்கும், இத்துறையில் முக்கிய அதிகாரம் உள்ளது!! இம்மாதம் முழுவதும், சூரியன் ஓரளவு சாதகமாக உள்ளது. செவ்வாயும், உதவிகரமாக சஞ்சரிப்பதால், விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.தண்ணீர் வசதி, போதிய அளவிற்கு உள்ளது. ஆதலால், கால்நடைகளும் ஆரோக்கியத்துடன் இருக்கும் என கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன.உங்கள் விளைபொருட்களுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற உகந்த மாதம் இது.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நன்மைகளைப் பாதுகாப்பதில் சுக்கிரனுக்கு பெரும் பங்குண்டு! அத்தகைய சுக்கிரன், உங்கள் ராசிக்கு அனுகூல நிலைகளில் வலம் வருவதால், குடும்ப நிர்வாகம் பிரச்னையின்றி நடக்கும்.திருமண வயதிலுள்ள பெண்களுக்கு, சிறு தடங்கல் ஏற்பட்டு, அதன் பிறகு திருப்திகரமான வரன் அமையும். வேலைக்கு முயற்சி செய்துவரும் பெண்மணிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அறிவுரை: அர்த்தாஷ்டக ராசியில் சனி - ராகு இணைந்திருப்பதால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். கூடியவரையில், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் வேண்டும். சனி மற்றும் ராகுவிற்கு இரவு நேரத்தில் சக்தி அதிகம். மறந்துவிடாதீர்கள்!!

பரிகாரம்: வியாழக்கிழமைகளில், ஏழை ஒருவருக்கு உணவளித்தால் போதும். தோஷம் பறந்தோடும். இதை அனுபவத்தில் காணலாம்.