search-icon-img
featured-img

துலாம்

Published :

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: குருபகவான் பத்தாம் இடத்திற்கு வருகிறார். கிரக நிலைகளின்படி, வருமானத்தைவிட செலவுகளே அதிகமாக இருக்கும். ஆயினும், சமாளித்துவிடுவீர்கள்! சக்திக்கு மீறிய அலைச்சல்களினால், உடல் ஆரோக்கியம் சிறிதளவு பாதிக்கப்படக்கூடும். இரவு நேரங்களில், வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் அவசியம்.குரு பகவானின் சஞ்சார நிலையினால், குடும்பத்தில், ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற இப்போது வழி பிறக்கும். விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும்.பிள்ளை அல்லது பெண்களில் ஒருவர் உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிட்டும். தற்காலிகப் பணியாளர்களுக்கு, பணி நிரந்தரமாகும்.கணவர் - மனைவியரிடையே பரஸ்பர ஒற்றுமையும் அன்பும் நிலவும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெண் அல்லது பிள்ளைகளில், ஒருவர் படிப்பு அல்லது உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்லும் யோகமும் அமையப்பெற்றுள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பெண்மணிகள் கருத்தரிப்பதற்குச் சாதகமாக உள்ளன சம்பந்தப்பட்ட கிரகங்கள். ஒருசிலருக்கு, தீர்த்த தல யாத்திரை சித்திக்கும் யோகமும் உள்ளது.

உத்தியோகம்: சம்பந்தப்பட்ட கிரகங்கள் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், புதிய வேலைக்கு முயற்சி செய்துவரும் அன்பர்களுக்கு, நல்ல நிறுவனத்தில் மனத்திற்கு உற்சாகமளிக்கும் பணி கிடைக்கும்.வெளிநாடு செல்ல ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு, வாய்ப்பு கிட்டும். ஏற்கனவே வெளிநாடுகளில் பணியாற்றிவரும் அன்பர்களுக்கு, வேலை நிரந்தரமாகும். உயரதிகாரிகளின் ஆதரவு பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலைக்கு முயற்சித்துவரும் இளைஞர்களுக்கும், பெண்மணிகளுக்கும் மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம் ஆதரவாக இருப்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. சிறு தொழிலில் இருப்பவர்களுக்கும்கூட, நல்ல லாபமும், முன்னேற்றமும் கிட்டும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ற தருணம் இது. வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும், சலுகைகளும் எளிதில் கிட்டும். சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்குச் சென்று வருவதும் லாபகரமாக அமையும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். சந்தை நிலவரமும், சாதகமாக அமையும்.

கலைத் துறையினர்: லாபகரமான வாய்ப்புகள் எளிதில் உங்களைத் தேடிவரும்! நிதி நிலைமையில், நல்ல அபிவிருத்தி ஏற்படும். உங்கள் நிகழ்ச்சிகளுக்கு, பொதுமக்களின் ஆதரவு கிடைப்பது உற்சாகத்தை அளிக்கும். ஒரு சிலர் வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. உங்கள் பொருளாதார நிலையை சரி செய்து கொள்ள ஏற்ற தருணம் இது. மக்களிடையே செல்வாக்கும், உயரும். பத்திரிகைகளின் ஆதரவும், கைகொடுக்கும்.நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோருக்கு, புதிய வாய்ப்புகள் கிடைப்பது, உற்சாகத்தை அளிக்கும். பல மாதங்களுக்குப் பிறகு, முதன் முறையாக வருமானம் கிட்டும். ஊழியர்களினால் ஏற்பட்டுவந்த பிரச்னைகள் நல்லபடியே தீரும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையை தங்கள் பிடியில் வைத்துக் கொண்டுள்ள சுக்கிரனும், இதர கிரகங்களும் சுபத்துவப் பாதைகளில் வலம் வருவதால், நல்ல வாய்ப்புகள் கைகொடுத்து உதவும். வருமானம் உயரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெறலாம். நீண்ட காலமாக வரவேண்டிய பாக்கிகள் இப்போது சிறிது, சிறிதாக வசூலாகும்.

மாணவ - மாணவியர்: கல்விக் கிரகமான புதனும், அத்துறையுடன் தொடர்பு கொண்டுள்ள மற்ற கிரகங்களும், அனுகூலமாக சஞ்சரிப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நினைவாற்றலும், கிரகிப்புத் திறனும் அதிகரிக்கும். உயர் கல்விக்கு உதவிகள் உங்களைத் தேடிவரும். ஆசிரியை மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு எளிதில் கிட்டும். பலருக்கு, உயர் கல்விக்கு "ஸ்காலர்ஷிப்" (உதவிப்பணம்) கிடைக்கும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைத் தனது ஆதிக்கத்தில் கொண்டுள்ள கிரகங்கள், சூரியனும், செவ்வாயுமாவார்கள். இவ்விரண்டு கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். ஆயினும், கடுமையான வெயிலும், உழைப்பும் உங்கள் உடல் ஆரோக்கியத்தைச் சற்று பாதிப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. இரவு நேரங்களில், வயல் பணிகளில் சற்று எச்சரிக்கையுடன் இருக்கும்படி, கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. கூடிய வரையில், சக்திக்கு மீறிய உழைப்பைக் குறைத்துக் கொள்வது அவசியம் என கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலனிற்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரங்களில், சுக்கிரனே பிரதானமானவர் எனக் கூறுகிறது, ஜோதிடக் கலை. அந்தச் சுக்கிரன், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால், இம்மாதம் முழுவதும், பெண்மணிகளுக்கு நன்மைகளே அதிகமாக இருக்கும்.

அறிவுரை: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். கூடியவரையில் வெயிலில் அலைவதையும், பிரயாணங்களையும் குறைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில், மருத்துவச் செலவுகளில் பணம் விரயமாகக்கூடும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகள்தோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், தீபத்தில் சிறிதளவு பசு நெய் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனுபவத்தில் காணலாம்.