search-icon-img
featured-img

மீனம்

Published :

(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)

குடும்பம்: குரு பகவான் ஐந்தாம் இடத்திற்கு விசேஷமாக வருகிறார்.விரய ஸ்தானத்தில் ராகு!கர்ப்பிணிப் பெண்மணிகளுக்கு சுகப் பிரசவம் உண்டாகும். வேலைக்கு முயற்சித்துவரும், பெண்மணிகளுக்கு, வெற்றி கிட்டும். விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும்.

உத்தியோகம்: உத்தியோகத் துறையினருக்கு, வேலைச் சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். ஆயினும், அதற்கேற்ற வருமானம் கிடைப்பது, சற்று கடினமாகும்.ஒருசிலருக்கு, வெளியூரில் அல்லது வெளி மாநிலத்தில் பணி கிடைக்கும். அதன் காரணமாக, குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய நிலை உண்டாகும். வெளிநாடு சென்று, பணியாற்ற ஆர்வமிகுந்தவர்களுக்கு, முயற்சி, திருவினையாக்கும்.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையினருக்கு, கிரக நிலைகள் சுபபலம் பெற்றுத் திகழ்வதால், நல்ல லாபம் கிடைக்கும். விஸ்தரிப்புத் திட்டங்களில், பணத்தைச் செலவிடலாம்.குறிப்பாக, ஏற்றுமதித் துறையினருக்கு, லாபகரமான காலகட்டம் இதுவே! வெளிநாட்டில் பிரபல வர்த்தக நிறுவனத்துடன் வியாபார ஒப்பந்தம் கையெழுத்தாகும். வர்த்தக அபிவிருத்திக்கு மிகவும் உதவிகரமாக இது அமையும்.புதிய முதலீடுகளுக்கு ஏற்ற தருணம் இது. சொந்த ஜாதகத்தில் தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் பலருக்குக் கிட்டும் என கிரக நிலைகள் தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துக் காட்டுகின்றன.

கலைத் துறையினர்: கலைத் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு்்ள்ள சுக்கிரன், பூரண சுப பலத்துடன் வலம் வருவதால், கலைத் துறையினருக்கு, லாபகரமான காலகட்டம் இது.நல்ல வாய்ப்புகள் உங்களுடைய வருமானத்தை உயர்த்தும். மக்களிடையே செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு வெளிநாடு சென்று, அங்கு நிகழும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டும். அதன் காரணமாக, வருமானமும் உயரும். திரையுலக நடிகர் மற்றும் நடிகையருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

அரசியல் துறையினர்: பல மாதங்களாக உங்களைப் புறக்கணித்து வந்த பிரபல அரசியல் கட்சி ஒன்றிலிருந்து, இப்போது அழைப்பு வரும். ஏனெனில், அவர்களுக்கு உங்கள் தயவு இப்போது தேவைப்படுகிறது."அரசியலில் நிரந்தர நண்பருமில்லை, நிரந்தரப் பகைவரும் இல்லை....!" எனக் கூறினர், நமது முன்னோர்கள். அது உண்மை என்பதை நமது அரசியல் வல்லுநர்கள் நிரூபித்து வருவதை அனுபவத்தில் இன்று காண்கிறோம். கிரக நிலைகளின்படி, இக்காலகட்டம் முழுவதும், அரசியல் சூழ்நிலை குழப்பமாகவே இருந்து வரும்.

மாணவ - மாணவியர்: வித்யாகாரகரான புதன் ஓரளவு சுப பலம் பெற்றிருப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பாடங்களில் கவனம் செலுத்த முடியும். ஆசிரியை மற்றும் ஆசிரியர்களின் உதவி எளிதில் கிட்டும். வெளிநாடு சென்று விசேஷ உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், அதற்கான அனைத்து உதவிகளும் எளிதில் கிட்டும். ஆதலால், இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரங்கள், சூரியனும், செவ்வாயும் ஆவர். இவ்விரு கிரகங்களும், சிறந்த சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், விவசாயத் துறையினருக்கு லாபகரமான காலகட்டம் இது.வயலைப் பார்த்தாலே, இவ்வுண்மை தெரியவரும். செழித்து வளரும் நெற்கதிர்கள் மனதைக் குளிரவைக்கும். நவீன விவசாய வசதிகள் எளிதில் கிட்டும்.தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், புதிய விளைநிலமும் மரத் தோப்புகளும் வாங்குவதற்கு வசதி கிட்டும். சிலருக்கு, தங்கள் விளை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் யோகம் அமைந்துள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

பெண்மணிகள்: பெரும்பான்மையான கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிப்பதால், உற்சாகமான காலகட்டத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள்!விருப்பங்கள் அனைத்தும், இனிதே நிறைவேறும். மேற்கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்த பெண்மணிகளுக்கு, நல்ல கலாசாலையில், இடம் கிடைக்கும்.உயர் கல்விக்குத் தேவையான பண உதவி உங்களைத் ேதடி வரும். படித்து, முடித்த பெண்மணிகளுக்கு, நல்ல நிறுவனத்தில், வேலைக்கு ஆர்டர் உத்தரவு வரும்.தற்காலிகப் பணியில் உள்ள பெண்மணிகளுக்கு, பணி நிரந்தரமாகும்.

அறிவுரை: கிரக நிலைகளின் அடிப்படையில், இது ஓர் அரிய - அற்புத சந்தர்ப்பமாகும். பயன் படுத்திக் கொள்வது, உங்கள் திறமையில் மட்டுமே உள்ளது.

பரிகாரம்: குரு பகவான், சனி பகவானுக்கும், ராகுவிற்கும் இப்போதைக்கு பரிகாரம் செய்து கொள்வது, நல்லது.சனிக்கிழமைகள்தோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் எள் எண்ணெய் தீபமேற்றி வருவது அதியற்புத பரிகார பலனை அளிக்கும்.மேலும், குருவிற்காக வியாழக் கிழமைகளில் ஏழை ஒருவருக்கு, உடை மற்றும் உணவளிப்பதும் கைமேல் நற்பலனையளிக்கவல்லது. இதனை அனுபவத்தில் காண்பீர்கள்.