search-icon-img
featured-img

ரிஷபம்

Published :

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: தன ஸ்தானத்தில், குரு பகவான் உச்ச கதியில் சஞ்சரிப்பதால், வருமானத்திற்குக் குறையிராது! திட்டமிட்டு செலவு செய்தால், எதிர்காலத்திற்கென்று சிறிதளவு சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு உள்ளது!!குடும்பத்தில், ஒற்றுமையும், மன அமைதியும் நிலவும். விவாக வயதில் பெண் அல்லது பிள்ளையிருப்பின் நல்ல வரன் அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். அவற்றின் காரணமாக, சுபச் செலவுகள் ஏற்படும். சமாளிப்பதில் பிரச்னை ஏதும் இராது. பணி காரணமாக, வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் சிலருக்கு உருவாகும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.ஒருசிலருக்கு, வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. கருவுற்றிருக்கும் பெண்மணிகளுக்கு, சுகப் பிரசவம் ஏற்படும்.

உத்தியோகம்: உத்தியோகத் துறையினருக்கு, அலுவலகச் சூழ்நிலை மன நிம்மதியையும், மன நிறைவையும் அளிக்கும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்குப் பிடித்த உத்தியோகம் அமையும்.வெளிநாடு சென்று, வேலை பார்க்கும் ஆர்வமிருப்பவர்களுக்கு, உதவிகள் தேடிவரும்.

தொழில், வியாபாரம்: நல்ல முன்னேற்றத்தை அளிக்கும்படி, கிரக நிலைகள் அமைந்துள்ளன.தற்போது நடைபெற்றுவரும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ற தருணம் இதுவே!நிதி நிறுவனங்களின் ஆதரவும், உதவியும் எளிதில் கிடைக்கும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனத்திற்கு ஆறுதலையளிக்கும். ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு, வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு ஒன்றிற்கு வர்த்தகம் சம்பந்தமாக சென்று வரும் வாய்ப்பும் உருவாகும். அதனால் வருமானமும், லாபமும் அதிகரிக்கும். புதிய விற்பனைக் கிளைகள் திறப்பதற்கு ஏற்ற காலகட்டம் இதுவே என்பதை கிரக நிலைகள் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன.

கலைத் துறையினர்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயரும். உங்கள் பொருளாதார நிலையைச் சரி செய்து கொள்ள ஏற்ற தருணம் இதுவே! தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு ஒன்றின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டும். அதன் காரணமாக, வருமானமும் உயரும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். திரைபடத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் கைகொடுக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முதல் முறையாக, புதிய படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சாத்தியக்கூறும் உருவாகும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பது, பெரும்பாலும் சுக்கிரனின் சஞ்சார நிலையை ஒட்டியே இருக்கும். இம்மாதம் முழுவதும், சுக்கிரன் மிகவும் அனுகூலமாக வலம் வருவதால், கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும். கட்சித் தொண்டர்களின் ஆதரவு, உற்சாகத்தையளிக்கும்.பத்திரிகைகளின் ஆதரவு, கைகொடுக்கும்.

மாணவ - மாணவியர்: மாணவ -மாணவியரின் கல்வி முன்னேற்றத்தை நிர்ணயிப்பது பெரும்பாலும் புதனின் சஞ்சார நிலையேயாகும். அத்தகைய புகழ்வாய்ந்த புதன், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக படியும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வீர்கள். உயர்கல்விக்கு, நல்ல கலா சாலையில் உங்கள் விருப்பப்படி இடம் கிடைக்கும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில விருப்பமிருப்பின், அதற்கு அனுகூலமாக உள்ளன, கிரக சஞ்சார நிலைகள்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை தங்களது அதிகாரத்தில் கொண்டுள்ள சூரியன், மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஓரளவு அனுகூலமாக சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிட்டும். கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். அடிப்படை வசதிகளான, தண்ணீர், உரம், விதைகள், நாற்றுகள் ஆகியவற்றிற்குக் குறையிராது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற ஏற்ற தருணம் இதுவே! தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் உள்ளது கிரக நிலைகளின்படி!

பெண்மணிகள்: பெண்மணிகளின் வசதிகளையும், முன்னேற்றத்தையும் நிர்ணயிப்பதில், சுக்கிரனுக்கு பெரும் பங்குண்டு! இந்தக் கால கட்டத்தில், சுக்கிரன் பரிபூரண சுப பலம் பெற்று, உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால், விருப்பங்கள் அனைத்தும், இனிதே நிறைவேறும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும், வனிதையருக்கு, நல்ல நிறுவனத்தில் மனதிற்கு திருப்தியளிக்கும் வேலை கிடைக்கும். தற்காலிகப் பணிகளில் உள்ளவர்களுக்கு, பணி நிரந்தரம் நிச்சயம்.

அறிவுரை: பல அரிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவர உள்ளன என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. பயன்படுத்திக் கொள்வது உங்களின் திறனில்தான் உள்ளது.

பரிகாரம்: சனிக்கிழமைகள்தோறும், காகத்திற்கு, சிறிது பருப்பு, எள், நெய் சேர்த்த ஐந்து சாத உருண்டைகள் வைத்துவந்தால் ேபாதும். கைமேல் பலன் கிட்டும். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.