(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய ரிஷபத்திற்கு, குரு மாறுவது நன்மை தராது! அதிக அலைச்சலும், குடும்பக் கவலைகளும், உடல் நலக் குறைவும், வீண் பண விரயமும் கவலையை அளிக்கும். மீன ராசியில் அமர்ந்துள்ள, பலம் பொருந்திய ராகு, சமய சஞ்சீவியாகத் தக்க தருணங்களில் உதவிக்கு வந்துவிடுவார். வரவிற்கு மீறிய செலவுகளினால், அடிக்கடி பணப் பிரச்னை ஏற்படும். அத்தகைய சந்தர்ப்பங்களில் எதிர்பாராத இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். வரும் ஒரு வருடக் காலத்திற்கு, பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கிரக நிைலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஏெனனில், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் களவுபோக சாத்தியக்கூறு உள்ளது. உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் அவசியம். குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். திருமண முயற்சிகளில் கவனமாக இருத்தல் வேண்டும். ஏெனனில் தவறான வரனை நிச்சயித்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன. வரும் ஒரு வருடக் காலத்திற்கு, முக்கிய விஷயங்களில், பொறுமை, நிதானம், தீர ஆேலாசித்து முடிவெடுப்பது அவசியம். தன ஸ்தானத்திற்கு, குரு பகவானின் சுபப் பார்வை இருப்பதால், தக்க தருணங்களில் உதவி கிடைக்கும்.
உத்தியோகம்: வேலை பார்க்குமிடத்தில், பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் அறிவுறுத்துகின்றன. மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் வேண்டாம். சக-ஊழியர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தல் வேண்டும். அவர்களது சொந்தப் பிரச்னைகளில் தலையிடாமலிருப்பது, தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் துலாம் ராசி அன்பர்கள், பிறருடன் நெருங்கிப் பழகுவதையும், அவர்களுக்கு உதவி செய்ய பணம் சம்பந்தமான ஆவணங்களில் கூட்டுக் கையெழுத்து போடுவதையும் தவிர்த்தல் வேண்டும். கிரக நிலைகளின்படி, சட்டப் பிரச்னைகளில் சிக்கிக்ெகாள்ளும் வாய்ப்பு உள்ளது.
தொழில், வியாபாரம்: வரும் ஒருவருடக் காலத்திற்கு, பண விஷயங்களில் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை, குரு பகவானின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. அதிக உழைப்பையும், வெயிலில் அலைவதையும், கூடியவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஐப்பசி மாதம் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்தல் முக்கியம். உற்பத்திக்கு அவசியமான மூலப் பொருட்களின் விலை திடீரென்று அதிகரிப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. ஆதலால், சந்தை நிலவரத்தையும், நிதிநிலைமையையும் ஆராய்ந்து பார்த்து, அவற்றிற்கேற்ப உங்கள் விற்பனைத் திட்டத்தை மாற்றியமைப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, நிதிநிறுவனங்களினால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
கலைத்துறையினர்: இந்த குரு பெயர்ச்சியினால், நீங்கள் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது. வாய்ப்புகள், ஏமாற்றத்தைத் தரும். வருமானம் குறையும். மருத்துவ செலவுகளையும் தவிர்க்க முடியாது. திரைப்படத் துறையினருக்கு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரின் ஆதரவு குறையும். திருமணமாகியுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் ஆகியோரிடையே ஒற்றுமை பாதிக்கப்படும். கருத்துவேற்றுமை அதிகரிக்கும்.
அரசியல்துறையினர்: வரும் ஒருவருட காலத்திற்கு, குரு பகவான் வீற்றிருப்பது, சுக்கிரனின் ராசியாக இருப்பதால், கட்சியில் ஆதரவு நீடிக்கிறது. ஆயினும், உங்கள் மீது மேலிடத் தலைவர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
மாணவ – மாணவியர்: வித்யாகாரகரான புதன், ஓரளவு அனுகூலமாகவே இருப்பதால், கல்வி முன்னேற்றம் சிறிதளவும் தடைபடாது! இருப்பினும், மற்ற கிரகங்கள் அனுகூலமாக இல்லாததால், அவ்வப்போது சிறு, சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, சக-மாணவர்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதைத் தவிர்த்தல் அவசியம். வீண் அலைச்சல்களையும், விலக்க வேண்டும்.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். சந்தையில் உங்கள் விளைச்சல்களுக்கு, போட்டிகளும் அதிகமாக இருக்கும். இது விற்பனையையும், லாபத்தையும் பாதிக்கும்.
பெண்மணிகள்: ராகு ஒருவரைத் தவிர, மற்ற கிரகங்கள் அனுகூலமாக இல்லை! இந்த ஆண்டு முழுவதும், குரு பகவானின் பார்வை வாக்கு, தனம், குடும்பம், சுகம், விரயம் ஆகிய ஸ்தானங்களுக்கு, குரு பகவானின் பார்வை கிடைப்பது, பிரச்னைகளின் கடுமையை பெருமளவில் குைறக்கும். குரு பார்க்கில், கோடி தோஷம் விலகும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆதலால், கோள்சார விதிகளின்படி, குரு பகவானின் அஷ்டம ஸ்தான சஞ்சார காலம் பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், அவற்றின் கடுமை பெருமளவில் குறைகின்றன.
அறிவுரை: வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடுங்கள். வெளியில் தரக்குறைவான உணவகங்களில் உண்பதைத் தவிர்த்தல் மிகவும் அவசியம். திட்டமிட்டு செலவு செய்வதும், கடன் வாங்குவதைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியம். ஏனெனில், இத்தகைய கிரக அமைப்பு நேரிடும்போது, ஏற்படும் கடன் வேகமாக வளரும் என மிகப் புராதனமான ஜோதிட நூல்கள் தெளிவாக விளக்கியுள்ளன.
பரிகாரம்: குரு, சனி பகவான் ஆகிய இருவருக்குமே, பரிகாரம் செய்வது, அளவற்ற நன்மைகளைச் செய்யும். அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில், வியாழக்கிழமை மாலை நேரத்தில் சிறிது நெய்யும், சனிக்கிழமைகளில் சிறிது எள் எண்ெணயும் சேர்த்து வந்தால், அற்புதமான பலன்களை அள்ளித் தரும். இதனை அனுபவத்தில் காணலாம்.