18-8-2026 முதல் 17-9-2026 வரை
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: தனாதிபதி செவ்வாய், சுபபலம் பெற்று, உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், பணப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை! திட்டமிட்டு செலவு செய்தால், சேமிப்பிற்கும் இடமுண்டு!!குரு பகவானின் சஞ்சார நிலையினால், சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணம் கிட்டும். நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்பட்டு, ஒற்றுமை குறையும். களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் வலம் வருவதால், திருமண முயற்சிகள் ைககூடும்.நண்பர்களுடன் பழகும்போது, எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் சக்திக்கு மீறிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். பணம் கொடுப்பதையும், கடன் வாங்குவதையும் தவிர்ப்பது அவசியம் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவர் - மனைவியரிடையே ஒருவருக்கொருவர் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது, அவசியம். வெளியூர்ப் பயணங்களின்போது, பொருட்கள், பணம் ஆகியவற்றை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.பிறருக்குக் கடன் கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். கொடுத்தால், திரும்பிவராது.
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால், பணிச் சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.இரவு நேரப் பணிகளில் பொறுப்பேற்றுள்ள உத்தியோகஸ்தர்களுக்கு, உடல்நலன் பாதிக்கப்படக்கூடும். பணிகள், பொறுப்புகள் ஆகியவற்றிற்கு ஏற்ற வருமானம் கிடைப்பதும், சற்று கடினமே! மேலதிகாரிகளின் அளவிற்கு மீறிய கண்டிப்பு கவலையை அளிக்கும்.புதிய வேலைக்கு முயன்று வரும் அன்பர்கள், இடைத்தரகர்களை நம்பிவிட வேண்டாம்.
தொழில், வியாபாரம்: மிகவும் கடுமையான போட்டிகளைச் சமாளித்தே, உங்கள் பொருட்களுக்கு லாபம் கிட்டும். அவ்விதம் கிடைக்கும் லாபமும், எதிர்பார்க்கும் அளவிற்கு இராது. புதிய முயற்சிகளில் இறங்குவதற்கு கிரக நிலைகள் சாதகமாக இல்லை.எந்நிலையிலும், கடன் வாங்குவதைத் தவிர்ப்பது அவசியம். கிரக நிலைகள் சாதகமாக இல்லாதபோது, வாங்கும் கடன் பல்கிப் பெருகும் எனவும், பிறகு அவற்றை அடைப்பது கடினம் எனவும், ஜோதிடக் கலை எச்சரிக்கை செய்கிறது. முன்பணம் இல்லாமல், சரக்குகள் கொடுப்பதைக் கண்டிப்பாக தவிர்க்கவும். சக கூட்டாளிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர்ப்பது அவசியம்.
கலைத் துறையினர்: கிரக நிலைகளின்படி, வாய்ப்புகள் குறையக்கூடும். அதன் காரணமாக, வருமானம் குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. இத்தகைய கிரக நிலைகளின்போது, கடன் கொடுப்பது கூடாது, கடன் வாங்குவதும் கூடாது என "பூர்வபாராசர்யம்" எனும் புராதன ஜோதிட நூல் எச்சரிக்கை செய்கின்றது.
அரசியல் துறையினர்: பேச்சிலும், பேட்டிகளிலும் நிதானமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. இல்லாவிடில் வீண் சர்ச்சைகளில் அகப்பட்டுக் கொள்ள நேரிடும். கூடியவரையில், கட்சித் தலைவர்களை அடிக்கடி சந்திக்காமல் இருப்பது உங்கள் எதிர்கால நலனிற்கு உகந்ததாகும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறையை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள புதனும், இதர கிரகங்களும் அனுகூலமாக இல்லை! புத்தகத்தைக் ைகயில் எடுத்தாலே, உறக்கமும், சோம்பலும் மேலிடும். விடுதிகளில் தங்கிப் படித்துவரும் மாணவ - மாணவியருக்கு வீட்டு நினைவு மனத்தை அரிக்கும்.பணப் பற்றாக்குறையும் கவலையை அளிக்கும். ஆசிரியர்களின் ஆதரவும், உதவியும் துணைநிற்கும்.
விவசாயத் துறையினர்: இயற்கையின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என கிரகநிலைகள் உறுதியளிக்கின்றன.
பயிர்கள் செழித்து வளர்ந்து, லாபத்தைப் பெற்றுத் தரும். கால்நடைகளின் பராமரிப்பில் செலவுகள் அதிகமாக இருப்பினும், நஷ்டம் ஏற்படாது என கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. சந்தையில், உங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதனால், உற்சாகம் மேலிடும். உங்கள் பொருளாதார நிலையை சரி செய்துகொள்ள ஏற்ற காலகட்டம் இதுவே!
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு அதிகாரம் கொண்டுள்ள சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், உற்சாகத்தை அளிக்கும் மாதம் இது. திருமணத்திற்குக் காத்திருக்கும் வனிதையருக்கு, நல்ல வரன் அமைந்து, திருமணமும் நடைபெறும். வேலைக்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு நல்ல நிறுவனத்தில், மனத்திற்கு திருப்தியளிக்கும் வேலை கிடைக்கும்.
அறிவுரை: பல நல்ல வாய்ப்புகள் இந்த ராசியினரைத் தேடி வரும். நழுவ விட்டுவிடாமல், பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும்படி, கிரக நிலைகள் சுபபலம் பெற்றுள்ளன.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிது எள் எண்ணெய் சேர்த்துவந்தால், நல்ல பலன் கிடைக்கும். இதனை அனுபவத்தில் காணலாம்.
அனுகூல தினங்கள்
ஆவணி : 1, 2, 6 - 9, 13 - 16, 20 - 23, 27.
சந்திராஷ்டம தினங்கள்
ஆவணி : 3 முதல் 5 மாலை வரை. மீண்டும் 30 பிற்பகல் முதல் 31 வரை.


