search-icon-img
featured-img

மகரம்

Published :

18-8-2026 முதல் 17-9-2026 வரை

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: இம்மாதம் முழுவதும், சனி, செவ்வாய் மற்றும் குரு ஆகியோரினால் நன்மைகள் உண்டாகும். மற்ற இதர கிரகங்களினால் நன்மை ஏதும் இராது. வருமானம் திருப்திகரமாக இருக்கும் செலவுகள் கட்டுப்பட்டே இருக்கும்.

ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், உஷ்ண சம்பந்தமான உபத்திரவங்கள் கவலையளிக்கும். குறிப்பாக, சரும சம்பந்தமான நோய்கள் கவலையை அளிக்கும். புதன், அனுகூலமாக குரு பகவானுடன் சேர்ந்திருப்பதால், எளிய சிகிச்சை மூலம் குணம் உண்டாகும். கூடியவரையில் வெளியில் அலைவதைத் தவிர்ப்பது நன்மையளிக்கும். அதேபோல் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பதும் நலன் பெறுவீர்.

உத்தியோகம்: உத்தியோகத் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ள ஜீவனகாரகரான சனிபகவான் வக்கிர கதியில் இருப்பதால் அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்த இயலும். மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள், பணிகளில் உற்சாகமளிக்கும். ஓய்வில்லாது உழைக்க வேண்டிவரும். அடிக்கடி வெளியூர்ப் பயணங்களில் அலுவலகம் சம்பந்தமாக செல்ல வேண்டிவரும்.எவ்வளவுதான் பாடுபட்டாலும், மேலதிகாரிகளைத் திருப்திபடுத்த இயலாது. ஆனால், உத்தியோகத்திற்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரம் ஆகியவற்றில் சந்தையில் நியாயமில்லாத போட்டிகள் நிலவும். மிகவும் பாடுபட்டே உங்கள் லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.பணியாளர்களால் அடிக்கடி பிரச்னைகள் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களின் போது பணத்தையும், விலையுயர்ந்த பொருட்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். களவு போகக் கூடும் என்பதற்காகவே இவ்வெச்சரிக்கை உங்களுக்குத் தரப்படுகிறது.புதிய முதலீடுகளையும், புதிய கிளைகளையும் திறக்கும் யோசனைகளை தற்போதைக்கு ஒத்திப் போடவும். காலம் சற்றே கனியட்டும் என்று காத்திருங்கள்.

கலைத் துறையினர்: கலைத் துறையை தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது சுக்கிரனாவார். அந்தச் சுக்கிரன் இம்மாதம் முழுவதும் ஓரளவே சுப பலம் பெற்றுள்ளதால், உங்கள் துறைக்கே உரித்தான போட்டியும், பொறாமையும் அதிகரித்துள்ளன. நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும். எதிர்பார்த்திருந்த அளவிற்கு வருமானம் இராது.மக்களிடையே ஆதரவு குறைவின்றிக் கிடைக்கும். பிரபலஸ்தர்களின் ஆதரவு, உங்களுக்குக் கைகொடுக்கும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையை நிர்ணயிப்பது சுக்கிரனாவார். சூரியனுக்கும், சனி பகவானுக்கும் அதில் பங்குண்டு!இம்மூன்று கிரகங்களின் நிலைகள் அனுகூலமாக சஞ்சரிப்பதால், அரசியல் துறையினருக்கு, ஆதாயமான காலகட்டமாகும், இது. உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு பரிபூரணமாக உங்களுக்குக் கிடைக்கும்.

மாணவ - மாணவியர்: மாணவ - மாணவியரின் முன்னேற்றத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகம் வித்யாகாரகரான புதன் ஆவார். அந்தப் புதன் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் உற்சாகத்துடன் ஈடுபடும். ஆசிரியை மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு பரிபூரணமாக உங்களுக்குக் கிட்டும். நினைவாற்றலும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று மேல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான நிதியுதவிகள் எளிதில் கிடைக்கும். முயற்சியுங்கள், வெற்றி கிட்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகங்கள் இரண்டு! அவ்விரண்டு கிரகங்களாகிய செவ்வாய் மற்றும் சூரியன் - இவ்விரு கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், வயல் பணிகள் சற்று கடுமையானதாக இருப்பினும், அதற்கேற்ற ஊதியம் உங்களுக்குக் கிடைக்கும்.ஆடு - மாடுகள் அபிவிருத்தியடையும். விவசாயத்திற்கு முக்கியமான இடுபொருட்களாகிய, உரம், விதைகள் மற்றும் நாற்றுகள், தண்ணீர் வசதிகள் அபரிமிதமானதாக இருக்கும். விவசாயப் பணிகளில் மனம் உற்சாகமாக ஈடுபடும் என கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

பெண்மணிகள்: சுக்கிரனும், இதர கிரகங்களும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், பெண்மணிகளுக்கு உற்சாகத்தையளிக்கக்கூடிய மாதமாகும். வேலைபார்க்கும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பல நன்மைகளை அளிக்கக் காத்திருக்கின்றன, கிரக நிலைகள். உடல் ஆரோக்கியமும், குடும்பச் சூழ்நிலையும் மகிழ்ச்சியை அளிக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.விவாகத்திற்குக் காத்திருக்கும் கன்னியருக்கு, மனத்திற்கு உகந்த மணாளன் அமைவார். உத்தியோகத்திற்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு மனத்திற்குப் பிடித்தமான வேலை கிடைக்கும்.

அறிவுரை: உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. செவ்வாய் உஷ்ண கிரகமாகும். ஆகவே, உடலை வெப்பப்படுத்தும் உணவு வகையறாக்களை அறவே தவிர்க்க வேண்டும், ஜோதிடமும், ஆயுர் வேத நூல்களும் எடுத்துக்காட்டுகின்றன. ஜோதிடமும், ஆயுர் வேதமும் ஒரு மனிதனுக்கு இருகண்கள் எப்படி அவசியமோ அதைப்போன்றதே இவ்விரு கிரகங்களும் நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானமொன்றாகத் திகழ்கிறது.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகள் தோறும், ஒரு ஏழைக்கோ அல்லது பசுவிற்கோ உணவளிப்பது மிகச் சிறந்த பரிகாரங்களாகும்.

அனுகூல தினங்கள்

ஆவணி : 3-6, 10-12, 17-19, 22, 26-28.

சந்திராஷ்டம தினங்கள்

ஆவணி : 23 மாலை முதல், 25 இரவு வரை.