search-icon-img
featured-img

தனுசு

Published :

15-6-2026 முதல் 16-7-2026 வரை

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

குடும்பம்: ராசிக்கு, சுக ஸ்தானத்தில் சனி பகவானும், அஷ்டமத்தில் குரு - சுக்கிரனும் சஞ்சரிப்பதால், வருமானத்தைவிட செலவுகளே, அதிகமாக இருக்கும்! திட்டமிட்டு, செலவு செய்யாவிடில், கடன் வாங்கியாவது சமாளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகக்கூடும். இது போதாதென்று, பழைய கடன்களும் மனதை உறுத்தும். "ஆனமுதலில், அதிகம் செலவானால்...!" என்ற மூத்தோர் சொல்லை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது! "நம் வாழ்வு, நம் கையில்...!" என்ற உண்மையை மறந்துவிடக் கூடாது. மனதை உறுதி செய்து கொண்டு, சிக்கனமாக செலவு செய்தால், விரைவில் நல்லகாலம் பிறந்துவிடும். வீண் செலவுகளைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்கக் கூடாது. திருமண முயற்சிகளில் தாமதமும், தடங்கல்களும் ஏற்படக்கூடும். வரனை நிச்சயிப்பதில், எச்சரிக்கை அவசியம். கிரக நிலைகள் அனுகூலமாக இல்லாததால், தவறான வரனை நிச்சயித்துவிடும் சாத்தியக்கூறு உள்ளது. எச்சரிக்கை அவசியம்.

உத்தியோகம்: அர்த்தாஷ்டக ராசியில், ஜீவன காரகரான சனி பகவான் சஞ்சரிப்பதால், பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம். மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.கூடியவரையில், சக-ஊழியர்களுடன் சற்று அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற பிரச்னைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க உதவும். அலுவலகத்தில் வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது, விவேகமாகும். மேலதிகாரிகளைப் பற்றி சக-ஊழியர்களிடம் விவாதிக்க வேண்டாம். உங்கள் கடமைகளிலும், பொறுப்புகளிலும் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள்! நிம்மதியாக இருக்கலாம்!!

தொழில், வியாபாரம்: சந்தையில், நியாயமற்ற போட்டிகள் சற்று கடினமாகவே இருக்கும் என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன! பொறுமை, நிதானம் அவசியம்! ஊழியர்களின் நியாயமற்ற கோரிக்கைகள் மன நிம்மதியைப் பாதிக்கும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் குறையும். பிரச்னைகள் ஏற்படும்போது, உணர்ச்சிவசப்படாமல், சமாளிப்பது மிகவும் அவசியம். சில தருணங்களில், பணத் தட்டுப்பாடும் சற்று கடுமையாகவே இருக்கும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. கொடுக்கல் - வாங்கலில் சற்று நிதானமாக இருத்தல் அவசியம் என்பதையும் கிரகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல், சமயோஜிதமாக வளைந்து கொடுத்து, நடந்து கொள்வது நல்லது.

கலைத் துறையினர்: கிரக நிலைகளின்படி, வாய்ப்புகள் குறையும். அதன் காரணமாக, வருமானமும் பாதிக்கப்படும். உங்கள்அத்தியாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உருவாகும். திட்டமிட்டு, செலவு செய்தால், பிறர் உதவியை நாட வேண்டிய அவசியம் இராது.குறிப்பாக, திரைப்படத் துறையினர் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம் என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. மாத ஆரம்பத்திலிருந்தே, திட்டமிட்டு, அவசியமற்ற செலவுகளைத் தவிர்த்தால், கவலையில்லாமல் இருக்கலாம்.

அரசியல் துறையினர்: உயர்மட்டத் தலைவர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. கட்சிப் பிரமுகர்களுடன் சற்று வளைந்து கொடுத்தும், விட்டுக் கொடுத்தும் சாதூர்யத்துடனும், நடந்து கொண்டால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். இல்லாவிடில், பிரச்னைகளில் சிக்கிக் கொண்டு, மன நிம்மதியை இழக்க நேரிடும்.

மாணவ - மாணவியர்: கிரகங்கள் ஓரளவே உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றனர். சக-மாணவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்படுவதைக் கண்டிப்பாக தவிர்த்தல் அவசியம். உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். நீங்களுண்டு. உங்கள் படிப்புண்டு என்றிருப்பது, மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.சக-மாணவர்களுடன் அளவோடு பழகுவது தேவையற்ற பிரச்னைகளில் நீங்கள் அகப்பட்டுக் கொள்ளாமலிருக்க உதவும். விடுதிகளில் தங்கி, படித்து வரும் மாணவ - மாணவியர், கைப் பணத்தை எண்ணிச் செலவழிப்பது மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் சுட்டிக் காட்டுகின்றன.

விவசாயத் துறையினர்: கூடியவரையில், கையிலிருப்பதைக் கொண்டு, சமாளிப்பது மிகவும் அவசியம். தற்போதுள்ள கிரக நிலைகளின்போது, வாங்கும் கடன் விருத்தியாகும் அடைபடுவதும் கடினமானதாக இருக்கும் என ஜோதிடக் கலை எச்சரிக்கை செய்கிறது.

பெண்மணிகள்: கிரக நிலைகள் ஓரளவே உங்களுக்கு ஆதரவாக வலம் வருகின்றன! குடும்பத்தில், தேவையற்ற வாக்குவாதம் வேண்டாம்! சிறு தவறும், பெரும் பிரச்னையில் கொண்டுவிடக் கூடும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள், தங்கள் அன்றாடப் பணிகளில் கவனமாக இருத்தல் நல்லது. சக-ஊழியர்களின் சொந்தப் பிரச்னைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். அதிலிருந்து விடுபடுவதற்கு பின்பு மிகவும் பாடுபட வேண்டியிருக்கும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.

அறிவுரை: பிறருடன் பழகுவதிலும், பிறர் பிரச்னைகளில் தலையிடுவதிலும் நீங்கள் மிக, மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றிலிருந்து விடுபடுவதற்கு, பின்பு நீங்கள் பாடுபடவேண்டியிருக்கும் என்பதை கிரக நிலைகள் இன்றே இப்போதே எச்சரிக்கை செய்கின்றன.

பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றின் தரிசனம் கைமேல் பலனளிக்கும். ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தனி தெய்வீக சக்தி உள்ளது.

அனுகூல தினங்கள்

ஆனி : 1, 2, 6, 7, 11-13, 18-20, 25-29.

சந்திராஷ்டம தினங்கள்

ஆனி: 3 பிற்பகல் முதல், 5 பிற்பகல் வரை. மீண்டும் 30 இரவு முதல் 31, 32.