17-7-2026 முதல் 17-8-2026 வரை
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம்: பூர்வ புண்ணிய. புத்திர ஸ்தானத்தில், வக்கிர கதியில் சனிபகவானும் வலம் வரும் சூழலில் ஆடி மாதம் பிறக்கிறது! பண வசதி போதுமான அளவிற்கு உள்ளது. ஆயினும், அதற்கேற்ப செலவுகளும் சற்று அதிகமாகவே இருக்கும். கூடிய வரையில், "இந்தச் செலவு அவசியம்தானா ...?" என்று ஒவ்வொரு செலவிற்கு முன், உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு, செலவு செய்யவும். பெரிய அளவில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டாம். சொல்லி வைத்தாற்போல், நண்பர் அல்லது உறவினர் ஒருவர் உங்களிடம் வந்து, பண உதவியை நாடுவார்! கையில் பணம் இருப்பதால், "இல்லை...!" என்று சொல்ல உங்களுக்கு மனம் வராது. இந்நிலையில், பணம் கொடுத்து உதவினால், அது திரும்பக் கிடைப்பது கடினமே! இத்தகைய தருணங்களில்தான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை ஜோதிடக் கலை வற்புறுத்திக் காட்டுகிறது. கொடுத்தால், அந்தப் பணம் திரும்பி வராது. திருமண முயற்சிகளில் வரனைப் பற்றி தீர விசாரித்து அதன் பின்பே வரனை நிச்சயிப்பது, மிகவும் அவசியம். கணவர் - மனைவியரிடையே ஒற்றுமை நிலவும். திருமணமான பெண்கள், கருத்தரிப்பதற்கு ஏற்ற தருணமிது.
உத்தியோகம்: உத்தியோக ஸ்தானத்தில், சுக்கிரன் பலம் பெற்று வலம் வருவதால், மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு, மன அமைதியைத் தரும். தற்போது நடைபெறும் தசையும், புக்தியும் அனுகூலமாக இருப்பின், அத்தகை யோருக்கு சறு ஊதிய உயர்வும், பதவியுயர்வும் கிடைக்கும். புதிய வேலைக்கு முயன்று வரும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில், நல்ல பணி கிடைக்கும். வெளிநாடு சென்று, வேலை பார்த்து சம்பாதிக்க ஆர்வமிருப்பின், இம்மாதம் முயலலாம். எளிதில் எண்ணங்கள் நிறைவேறும். சொந்தத் தொழில் நடத்த விருப்பமிருப்பின், முயலலாம்.
தொழில், வியாபாரம்: வர்த்தக விஸ்தரிப்பிற்கு உகந்த நேரம் இதுவே! புதிய கிளைகள் திறக்கலாம். சந்தை நிலவரம் உங்களுக்கு ஆதரவாக உள்ளது.நிதி நிறுவனங்களின் உதவி எளிதில் கிட்டும். ஏற்றுமதி, இறக்குமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும், வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.
கலைத் துறையினர்: கலைத் துறைக்கு, ஆதிபத்தியம் கொண்டுள்ள சுக்கிரனும், மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், லாபகரமான கட்டத்தின் ஆரம்பக் காலம் இதுவே என்பது உறுதியாகத் தெரிகிறது. சிலருக்கு, வெளிநாடு சென்று, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும், அதன் மூலம் வருமானமும் கிட்டும். மக்களிடையே செல்வாக்கு உயரும். உங்கள் பொருளாதார நிலையை சரி செய்து கொள்ள ஏற்ற மாதம் இது.
அரசியல் துறையினர்: இம்மாதம் முழுவதும் அரசியல் துறைக்கு அதிகாரம் படைத்த, சுக்கிரனும், இதர கிரகங்களும், சுபத்துவப் பாதைகளில் வலம் வருவதால், மக்களிடையேயும் கட்சியிலும் செல்வாக்கு அதிகரிக்கும்.உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு உங்களுக்குத்தான்...! தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், செல்வாக்கு மிகுந்த நண்பர் ஒருவரின் சிபாரிசினால். முக்கிய பதவி ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் முக்கியமான திருப்பம் இது!
மாணவ - மாணவியர்: "வித்யாகாரகரான" புதன், அனுகூலமாக சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றல் அதிகரிக்கும். கிரகிப்புத்திறன் கூடும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல், படிப்பில் உற்சாகத்தையளிக்கும். வெளிநாடு செல்ல விருப்பமிருப்பின், அதற்கான பண உதவி கிட்டும். பிரபல அந்நிய நாட்டுக் கல்வி நிறுவனத்தில் உயர் கல்விக்கு இடம் கிடைக்கும்.
விவசாயத் துறையினர்: அடிப்படை வசதிகளுக்கு எவ்விதக் குறையும் இராது என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பலருக்கு, புதிய விளைநிலம், கால்நடைகள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. பழைய கடன்கள் இருப்பின், அவையனைத்தையும் அடைத்து நிம்மதிபெற ஏற்ற தருணம் இது.
பெண்மணிகள்: கிரக நிலைகள் சிறந்த சுப பலம் பெற்று இருப்பதால், மகிழ்ச்சிக்குக் குறைவிராது.குடும்பச் சூழ்நிலை, மன நிறைவையளிக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் பெருமை தரும். வேலைக்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு, நல்ல நிறுவனத்தில், மனதிற்கு நிறைவைத் தரும் பணி கிடைக்கும். திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னியருக்கு, நல்ல வரன் அமையும்.கருத்துவேற்றுமை காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பிரிந்திருந்த கணவர் - மனைவி பிரச்னை தீர்ந்து ஒன்று சேர்வர்.
அறிவுரை: அன்றாட வாழ்க்கையில், பொறுமை, நிதானம் அவசியம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் நெய் சேர்த்து வந்தால் போதும். அல்லது, தினமும் ஏழை ஒருவருக்கு உணவளித்துவந்தால், அதே நற்பலன் கிட்டும். வசதிக்கேற்ப செய்தால் போதும்!!
அனுகூல தினங்கள்
ஆடி : 4-7, 11-14, 18-20, 26, 27, 31, 32.
சந்திராஷ்டம தினங்கள்
ஆடி : 23 பின்னிரவு முதல், 25 வரை.


