search-icon-img
featured-img

ரிஷபம்

Published :

15-6-2026 முதல் 16-7-2026 வரை

(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: வருமானம் திருப்திகரமாக இருப்பினும், செலவுகளும் அதற்கேற்பவே இருப்பதால், சேமிப்பிற்குச் சாத்தியக்கூறு கிடையாது! குரு பகவான், சாதகமாக இல்லாததால், திருமண முயற்சிகளில் அதிக பிரயாசையும், அலைச்சலும் உடலை வருத்தும். ஏமாற்றமே மிஞ்சும். மருத்துவச் செலவுகளையும் தவிர்க்க இயலாது. சிறு விஷயங்களுக்குக்கூட அதிக அலைச்சலும், முயற்சியும் தேவைப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணங்களில் பணமும் நேரமும் விரயமாகும். கணவர் - மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் குறையும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. ஒரு சிலருக்கு வீடு மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படக்கூடும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரன் அமைவதில் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில், பலம் வாய்ந்த ராகு சஞ்சரிப்பதால், வேலை பார்க்கும் இடத்தில், பிரச்னைகள் ஏற்படக்கூடும். மேலதிகாரிகள் மற்றும் சக-ஊழியர்கள் ஆகியோருடன் கருத்துவேற்றுமையும், வாக்குவாதமும் ஏற்பட்டு, மன அமைதி பாதிக்கப்படும். பொறுப்புகளில் சிறு, சிறு தவறுகள் ஏற்படக்கூடும். அன்றாடக் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பது மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம், கவலையை அளிக்கும். நியாயமற்ற போட்டிகள் உங்கள் விற்பனையைப் பாதிக்கும். சந்தை நிலவரம் அனுகூலமாக இல்லை அஜாக்கிரதையாக இருப்பின், நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். சக கூட்டாளிகளில் சிலர் விலகிச் சென்றுவிடுவார்கள். வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையக்கூடும். அதன் காரணமாக, அடிக்கடி பணப் பிரச்னை ஏற்படக்கூடும். எளிதாகக் கடனுதவி நல்கிடும் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் குறையக்கூடும். புதிய முதலீடுகளில் ஈடுபடவேண்டாம். சக கூட்டாளிகளின் ஒற்றுமை குறைவினால், பணிச் சுமை அதிகரிக்கும். நிதி நிறுவனங்களின் ஆதரவு பாதிக்கப்படும். அடிக்கடி பணப் பிரச்னை கவலையை அளிக்கும்.

கலைத் துறையினர்: நன்றாகவே கிடைத்து வந்த வாய்ப்புகள், குறையக்கூடும். அதன் காரணமாக, வருமானமும் குறையும். மக்களிடையே செல்வாக்கு பாதிக்கப்படும். குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோருக்கு வருமானம் குறையும். வசதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். கைப்பணத்தை எண்ணி, எண்ணிச் செலவிடுவது அவசியம். இல்லாவிடில், மாதக் கடைசியில் பணப் பிரச்னை உண்டாகும். எக்காரணத்தைக் கொண்டும், கடன் வாங்காமல் இருப்பது, அவசியம். ஏனெனில், இத்தகைய கிரக நிலைகள் அமையும்போது, வாங்கும் கடன் எளிதில் அடைபடாது எனக் கூறுகிறது, "ஜோதிட பாரிஜாதம்" எனும் அதியற்புத புராதன ஜோதிடக் கிரந்தம்.

அரசியல் துறையினர்: உயர்மட்டத் தலைவர்களுடன் பழகுவதில், எச்சரிக்கையும், நிதானமும் அவசியம் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. உயர்மட்டத் தலைவர்களுடன் கருத்து வேற்றுமையும் ஏற்படக்கூடும். புத்தி சாதூர்யம், வளைந்து கொடுத்தல் ஆகியவை மிக மிக அவசியம். போட்டி அரசியல் கட்சிகளிடமிருந்து, ரகசிய அழைப்புகள் வரும்! எவ்வித சபலத்திற்கும் இடம் கொடாமல் மன உறுதியுடன் இருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.

மாணவ - மாணவியர்: கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் சிறிதளவு பாதிக்கப்படும். ஒருசிலருக்கு, "கூடா நட்பு, தேடிவரும்". கூடியவரையில், பிற நண்பர்களுடன் அளவிற்கு மீறிப் பழகுவதையும், வெளியே சுற்றுவதையும் தவிர்ப்பது உங்்கள் எதிர்காலத்திற்கு அளவற்ற நன்மைகளைச் செய்யும். மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பும், வசதிகளும் சிலருக்குக் கிட்டு்ம். வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது, மிக, மிக அவசியம்.

விவசாயத் துறையினர்: பூமிகாரகரான செவ்வாய், சுப பலம் பெற்றுத் திகழ்வதால், விவசாயத் துறையுடன் தொடர்பு கொண்டுள்ள மற்ற கிரங்களும், சுப பலத்துடன் சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும். வருமானமும் கிட்டும். தண்ணீர், விதைகள் மற்றும் உரம் ஆகிய அடிப்படை வசதிகள் குறைவின்றிக் கிடைக்கும். அரசாங்கக் கொள்கைகளும், உங்களுக்கு ஆதரவாக துணை நிற்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற ஏற்ற மாதம் இதுவே!

பெண்மணிகள்: இம்மாதம் முழுவதும் சுக்கிரன், உங்களுக்குச் சாதகமாகவே சஞ்சரிப்பதால், மனதிற்கு மகிழ்ச்ியை ஊட்டும் மாதம் இது!! வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணமாகியுள்ள பெண்மணிகளுக்கு, கருத்தரிக்க கிரக நிலைகள் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, மனதிற்கேற்ற மணாளன் அமைவார். நிரந்தர நோயுற்ற வயதான மூதாட்டிகளுக்கு, நல்ல குணம் தெரியும்.

அறிவுரை: பல வகைகளிலும், யோக பலன்களை அளிக்கக்கூடிய மாதம் இது. பயன்படுத்திக்கொள்வது உங்கள் திறனில் மட்டுமே உள்ளது.

பரிகாரம்: தினமும் காலையில், பசுவிற்கு உணவளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். காகத்திற்கு தினமும், நெய், எள், பருப்பு கலந்த ஐந்து சாத உருண்டைகள் வைத்து வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

அனுகூல தினங்கள்:

ஆனி: 4-6, 10, 11, 18-21, 25-27, 30-32.

சந்திராஷ்டம தினங்கள்

ஆனி: 14 பின்னிரவு முதல் 17 பிற்பகல் வரை.