search-icon-img
featured-img

மேஷம்

Published :

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

14-04-2026 முதல் 13-04-2027 வரை

குடும்பம்: இப்புத்தாண்டு முழுவதும் மேஷ ராசி அன்பர்களுக்கு வரவும், செலவும் சமமாகவே இருக்கும் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சேமிப்பிற்கு சாத்தியக்கூறு இல்லை! ‘‘அர்த்தாஷ்டக” ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதே இந்நிலைக்குக் காரணம்!! இருப்பினும், திட்டமிட்டு செலவு செய்தல், குடும்பத்திற்கு நல்லது. திருமண முயற்சிகளில் வரன் அமைவதில் அலைச்சலும், அதிகப் பிரயாசையும் தேவைப்படும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணம் கிட்டும். ஆண்டு முழுவதும் கவலைப்படும் அளவிற்கு உபாதைகள் ஏற்பட வாய்ப்பில்லை. நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர நல்லெண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு, வெளிநாட்டுப் பணிக்கு உத்தரவு கிடைக்கும். ஆதலால், அவர் வெளிநாடு செல்லவேண்டி வரும். கணவர் - மனைவியரிடையே ஒற்றுமை நிலவும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை ெசவ்வாய் மற்றும் சனி பகவானின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

உத்தியோகம்: உத்தியோகத் துறை அன்பர்களுக்கு, பணிச் சுமை சற்று அலுப்பை ஏற்படுத்தினாலும், சனி மற்றும் ராகுவின் இணைப்பினால், பதவி உயர்வு கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. மேலதிகாரிகளின் ஆதரவு மன நிறைவைத் தரும். வெளிநாடு சென்று பணியாற்ற ஆர்வமிருப்பின், அவ்விருப்பம் இனிதே நிறைவேறும்! வேலையில்லாமல் துன்புற்றிருக்கும் மேஷ ராசி நேயர்களுக்கு புதிய வேலைக்கு உத்தரவு வரும். ஆயினும், பலருக்கு வெளியூர் செல்ல வேண்டியிருக்கும் - புதிய பணியில் சேர்வதற்காக!

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையைத் தங்கள் அதிகாரத்தில் கொண்டுள்ள கிரகங்கள் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், சந்தை நிலவரம் உதவிகரமாக அமைந்துள்ளது. உங்கள் சரக்குகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிறுவனங்களின் உதவி தக்க தருணத்தில் கிடைப்பது, மன நிம்மதியை அளிக்கும். வெளி மாநிலங்களிலிருந்து வந்து சேரும் ஊழியர்களின் கடின உழைப்பு, உங்கள் வியாபார முன்னேற்றத்திற்கு உதவிகரமாக அமைவதால், லாபம் அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.

கலைத் துறையினர்: கலைத் துறைக்கு அதிகாரகமும் ஆதிபத்தியமும் கொண்டுள்ளவர் சுக்கிரனாவார். கலைத்துறை, அவரது கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அத்தகைய சக்திவாய்ந்தவர் சுக்கிரனும், சனி பகவானும் அனுகூல நிலைகளில் சஞ்சரிப்பதால், நல்ல வருமானம் கிடைக்கும். மக்களிடையே செல்வாக்கும் பிரபலமும் உயரும். சினிமாத் துறையில் பணியாற்றிவரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆகியோருக்கு பல நன்மைகள் காத்துள்ளன. கொடுப்பதில் சுக்கிரனுக் கென்று ஜோதிடக் கலையில் ஒரு தனி இடமுண்டு! அத்தகைய சுக்கிரன் உங்களுக்கு பரிபூரண ஆதரவாக சஞ்சரிப்பதால், நீங்கள் நடித்துள்ள படங்கள் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தரும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு ஒன்றிற்குச் சென்று, அங்கு படப்பி்டிப்பில், நடிக்கும் வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறை, பெரும்பாலும் சுக்கிரனின் ஆதிபத்தியத்தில்தான் உள்ளதாக ஜோதிடக் கலை விவர்ித்துள்ளது. அந்தச் சுக்கிரன், சிறந்த சுப பலம் பெற்று வலம் வருவதால், மக்களிடையே செல்வாக்கு உயரும். சூரியன் ஆதரவாக இருப்பதால்செல்வாக்கு மிகுந்த ஒருவரின் ஆதரவு பல நன்மைகளை உங்களுக்கு அளிக்கவுள்ளது. மக்களிடையே செல்வாக்கும் உயரும்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிக்கம் கொண்டுள்ள புதனும் (வித்யா காரகர்) இத்துறையுடன் தொடர்பு கொண்டுள்ள மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு, தேர்வு முடிந்தவுடன் நல்ல வேலை கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.பலருக்கு, வெளிநாடு சென்று பிரத்யேக உயர் கல்வி பெறுவதற்கும் வாய்ப்புள்ளது, இது ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. பயன்படுத்திக் கொள்வது, உங்கள் திறனில் மட்டுமே உள்ளது.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையின் வெற்றிக்கு அவசியமான தண்ணீர், உரம், இடுபொருட்கள், கால்நடைகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும். அரசாங்கக் கொள்கைகளும் அனுகூலமாக உள்ளன. நல்ல விளைச்சலும், விளைபொருட்களுக்கு சந்தையில் நல்ல விலையும் கிடைக்கும். உங்கள் பொருளாதார நிலையை சரி செய்து கொள்வதற்கு உதவிகரமான மாதமிது. பயன்படுத்திக் கொள்வது, உங்கள் திறமையில்தான் உள்ளது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து ந்ிம்மதி பெறலாம்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு பொறுப்ேபற்றுள்ள சுக்கிரன், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூவரும் சுப பலம் பெற்று வலம் வருவதால், சகோதரிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய மாதமிது. வேலைக்கு முயற்சித்து வரும் மகளிருக்கு, நல்ல நிறுவனத்தில் மன நிறைவையளிக்கும். வேலை கிடைக்கும். மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு நல்ல வரன் அமையும்.

அறிவுரை: கற்பனையான கவலைகளில் மனதை செலுத்த வேண்டாம்.

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அருகிலுள்ள, திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிதளவு நெய் சேர்த்து, தரிசித்துவிட்டு வந்தால் போதும். ஒவ்வொரு துளி நெய்க்கும் அளவற்ற சக்தி உள்ளது. இதை அனுபவத்தில் காணலாம்.