உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை
14-04-2026 முதல் 13-04-2027 வரை
குடும்பம்: ஜீவனகாரகரான சனி பகவான், ராசிக்கு ‘‘திரிதீய ஸ்தானத்தில்” அமர்ந்திருப்பதால், பணப் பற்றாக்குறை இராது. செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில், குரு பகவான் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் சுப நிகழச்சிகள் நிகழும். புகழ்பெற்ற திருத்தல தரிசனம் ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. தசா, புக்திகள் சாதகமாக அமையப் பெற்று, பூர்வ புண்ணிய ஸ்தானமும் சுப பலம் பெற்றிருப்பின், பரம பவித்திரமான கங்ககையில் ஸ்நானம் செய்யும் பாக்கியமும் கிட்டும். ஒருசிலருக்கு, கயா ேக்ஷத்திரம் சென்று, தங்கள் மூதாதையருக்கு திதி - தர்ப்பணம் செய்யும் தன்னிகரற்ற பாக்கியமும் கிடைக்கும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, மனத்திற்கேற்ற மணாளன் அமைவார். பல பெண்மணிகளுக்கு மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குடும்பத்தில் பணக் கஷ்டம் தீரும்.
உத்தியோகம்: கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் ஏங்கி நிற்கும் மகர ராசி இளைஞர்களுக்கும் - பெண்களுக்கும் புதிய நம்பிக்கையை ஊட்டும் கால கட்டமிது. பல மாதங்களாக, முயற்சித்து வந்த நிறுவனத்தில் பணி கிடைக்க உத்தரவு வரும். கிரக நிலைகள் சாதகமாக அமைந்துள்ளன. பலருக்கு, வெளிநாட்டிலுள்ள பிரபல நிறுவனமொன்றில் பணி கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைப்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. குடும்பத்தில், பல பிரச்னைகளுக்குக் காரணமான பணப் பற்றாக்குறை நல்லபடியே தீரும். ஆயினும், இதே காரணத்திற்காக, குடும்பத்தை விட்டுத் தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும்.
தொழில், வியாபாரம்: தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு, வழி பிறக்கும். சந்தை நிலவரம் அனுகூலமாக மாறுகிறது! வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் உதவியும், சலுகைகளும் தக்க தருணத்தில் கைகொடுத்து, உதவும். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற தருணமிது!! வெளிநாட்டிலுள்ள பிரபல நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு - புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகும். சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக, வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பும் பலருக்குக் கிட்டும். புதிய விற்பனைக் கிளைகள் திறப்பதற்கும் ஏற்ற தருணமிது என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன.
கலைத் துறையினர்: பல மாதங்களாக, எதிர்பார்த்து ஏங்கியிருந்த, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்! ‘‘வருமானம் திடீரெனக் குறைந்துவிட்டதே?” - என கவலைப்பட்டுக் கொண்டிருந்த மகர ராசியினரை, மீண்டும் தயாரிப்பாளர்கள் தேடி வருவார்கள். மக்களிடையே இழந்த செல்வாக்கையும், புகழையும் மீண்டும் பெற கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.
அரசியல் துறையினர்: அரசியல் துறையை தனது பிடியில் வைத்துக் கொண்டுள்ள சுக்கிரன், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், கட்சியில் ஆதரவு பெருகும். தொண்டர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். உயர்மட்டத் தலைவர்கள் உங்கள் கருத்துக்களுக்கு, செவி சாய்ப்பார்கள்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள புதனும் மற்ற கிரகங்களும், உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். உயர் கல்விக்கு நிதியுதவி கிட்டும். வெளிநாடு சென்று விசேஷ மேல்படிப்பு பயில விருப்பமிருப்பின், அதற்கான சர்வ கலாசாலையில் இடம் கிடைக்கும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அவசியமான தண்ணீர், உரம், விதைகள், கால்நடைகள் ஆகியவை தங்கு தடையின்றிக் கிடைக்கும். தக்க தருணத்தில், அளவோடு மழை பொழியும். வயலைப் பார்த்தாலே உள்ளம் குளிரும். நெல், வாழை, கனிகள் ஆகியவற்றை பயிர் செய்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெறலாம். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விளை நிலம் மற்றும் கால்நடைகள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது.திட்டமிட்டு செலவு செய்தால், எதிர்காலத்திற்கென்று சிறிது சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கும் சுக்கிரன் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், இந்தக் காலகட்டம் முழுவதும், பெண்மணிகளுக்கு பல நன்மைகள் காத்துள்ளன. படித்து, வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, நல்ல வேலை கிடைக்கும். உயர் கல்விக்கு முயற்சித்துவரும் மாணவியருக்கு, நல்ல கலாசாலையில் இடம் கிடைக்கும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். திருமண மாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும்.
அறிவுரை: பொறுமை, நிதானம் அவசியம். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: திங்கட்கிழமைதோறும், அருகிலுள்ள திருக்ேகாயில் ஒன்றில் மாலையில் மண் அகல் விளக்கில் நெய் தீபம் ஒன்று ஏற்றி வந்தால் போதும். நல்ல பலன் கிட்டும். தினமும், காகத்திற்கு எள், பருப்பு, நெய் சேர்த்த ஐந்து சாத உருண்டைகள் வைத்து வந்தால் போதும். மகத்தான பரிகார பலன் கிட்டும்.


