search-icon-img
featured-img

கும்பம்

Published :

(அவிட்டம் 3,4 ம் பாதம், சதயம், பூரட்டாதி 1 2 3 ம் பாதம்)

உதவும் மனப்பான்மை அதிகம் உடைய கும்ப ராசி அன்பர்களே. இதுவரை உங்கள் ராசிக்கு 5 இருந்து எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், மன தெளிவும், தெய்வ அனுகூலமும், அதிர்ஷ்ட வாய்ப்புகளும், குழந்தைகளால் மகிழ்ச்சியும்,தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வங்கி கடனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். எதிரிகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். நீண்ட நாட்களாக வேலை இல்லாதவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.குரு பகவான் 5ம் பார்வையால் 10ம் வீட்டை பார்ப்பதால் வேலை வாய்ப்புகள் தேடி வரும். குரு பகவான் 7ம் பார்வையால் 12ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய வியாபாரம் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கவனமாக கையாளுங்கள்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுங்கள். பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது. ஆசிரியர் சொல் கேட்டு நடப்பது அவசியம்.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: மதுரை பதினெட்டாம்படி கருப்பசாமியை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.