(அஸ்வினி,பரணி,கார்த்திகை 1ம் பாதம்)
தைரியமும் வீரியமும் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சரித்து எடுக்கும் முயற்சிகளில் தடை, சுய சந்தேகம், எதிர்காலம் பற்றிய பயம், மனக்குழப்பம், உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 4ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். இருப்பினும் தாய் உடல் நலனில் கவனம் தேவை, தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் உண்டாகும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் வந்து நீங்கும். சிறு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாழ்வில் சிறுசிறு காரிய தடைகள் பிரச்னைகள் உருவாகும். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்.குரு பகவான் 5ம் பார்வையால் 8ம் வீட்டை பார்ப்பதால் வீடு மனை சொத்துக்கள் வாங்குவது, விற்பது உண்டாகும். குரு பகவான் 10ம் வீட்டை பார்ப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வுகள் ஏற்படும். குரு பகவான் 12ம் வீட்டை பார்ப்பதால் சுப விரயங்கள் அதிகரிக்கும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய வியாபாரம் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கவனமாக கையாளுங்கள்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசூக்காக கையாளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. மறதி வர வாய்ப்புள்ளதால் நினைவாற்றலை அதிகரிக்க யோகா மற்றும் தியானம் பயில்வது நல்லது. கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம்.
பரிகாரம்: பழனி முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


