search-icon-img
featured-img

மகரம்

Published :

(உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம்1,2 ம் பாதம்)

உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரித்து உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு. கடன் பிரச்னை, வழக்கு விஷயங்கள், எதிரிகளால் பிரச்னை தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த பிரச்னைகள் தடைகள் நீங்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். இதுவரை தடைபட்ட சுப காரியங்கள் நடக்கும். விருந்தினர் வருகை உண்டு. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. புதிய வியாபாரம் முயற்சிகள் கைகூடும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.குரு பகவான் 5ம் பார்வையாக 11ம் பார்ப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குரு பகவான் 7ம் பார்வையாக ராசியை பார்ப்பதால் மனம் தெளிவு பெறும். குரு பகவான் 9ம் பார்வையாக 3ம் வீட்டை பார்ப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல மாற்றம் உண்டு. புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் ஆதாயம் உண்டு.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உண்டு.மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் அதிக ஆர்வம் உண்டாகும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள்.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.

பரிகாரம்: காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.