(மிருகசீரிடம் 3 4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1 2 3 ம் பாதம்)
எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரித்த குரு பகவான் மனக்குழப்பம், எதிர்மறை சிந்தனை, பழைய தோல்விகளால் மற்றும் பிரச்னைகளால் மன அழுத்தம், எதிர்காலம் பற்றிய பயம், கோபம் தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 2ல் இருப்பதால் இதுவரை இருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் இனிய பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்.குரு பகவான் தனது 5ம் பார்வையால் 6ம் வீட்டைப் பார்ப்பதால் வங்கி கடன் முயற்சிகள் கைகூடும். குரு பகவான் தனது 7ம் பார்வையால் 8ம் வீட்டை பார்ப்பதால் சொத்து சேர்க்கை உண்டாகும். குரு பகவான் தனது 9ம் பார்வையால் 10ம் வீட்டை பார்ப்பதால் தொழில் மற்றும் உத்யோக ரீதியான உயர்வுகள் உண்டாகும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் ஆதாயம் உண்டு.உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை கூடும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும்.மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவர். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.
பரிகாரம்: காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாளை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


