search-icon-img
featured-img

சிம்மம்

Published :

(மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்)

அதிகாரமும் ஆளுமை திறனும் மிக்க சிம்ம ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரித்து எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுதலும், அஷ்டம சனியின் தாக்கமும் குறைத்த குரு பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரித்து தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவச் செலவினங்கள், மறைமுக எதிர்ப்புகள், நம்பிக்கை துரோகங்கள், எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் தர இருப்பதால் எதிலும் பொறுமையும், நிதானமும், விழிப்புணர்வும் தேவை.குரு பகவான் 5ம் பார்வையாக 4ம் வீட்டை பார்ப்பதால் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும். குரு பகவான் 7ம் பார்வையாக 6ம் வீட்டைப் பார்ப்பதால் வங்கி கடன் கிடைக்கும். குரு பகவான் 9ம் பார்வையாக 8ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கவனமாக கையாளுங்கள்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த விஷயத்தையும் நாசூக்காக கையாளுங்கள்.மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: சோளிங்கரில் உள்ள நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.